கொரோனா இல்லை.. ஆனாலும் வடகொரியாவில் திடீர் ஊரடங்கு.. காரணத்தை கேட்டா அசந்து போவீங்க! என்னாச்சு?
பியாங்யாங்: மர்மதேசமான வடகொரியாவின் அதிபராக உள்ள கிம் ஜான் உன் வித்தியாசமான முறையில் ஆட்சி செய்து வருகிறார். அவர் பிறப்பிக்கும் ஒவ்வொரு உத்தரவும் வித்தியாசமான முறையில் இருக்கும். அந்த வகையில் தான் வடகொரியாவில் கொரோனா பரவல் இல்லாத நிலையிலும் திடீரென்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன? என்பது தற்போது வெளியாகி உள்ளது.
உலகில் மர்மதேசங்களில் ஒன்றாக வடகொரியா உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்நாட்டின் அதிபர் கிம் ஜான் உன் ஆவார். வடகொரியாவில் நடக்கும் விஷயங்கள் ஒன்றும் வெளியில் தெரிவது இல்லை. ராணுவ கட்டுப்பாட்டில் நாட்டை வழிநடத்தும் கிம் ஜான் உன் கடும் விதிகளை அங்கு அமல்படுத்தி உள்ளார்.
இந்த விதிகளை மீறும் நபர்களுக்கு கொடூரமான தண்டனைகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையிலும் தற்போது வடகொரியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. அது ஏன்? என்பது பற்றிய விபரம் வருமாறு:

கொரோனா இல்லை என பெருமை
சீனாவில் இருந்து கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதன்பிறகு அந்த வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவியது. இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்தது. மக்கள் கொத்து கொத்தாக பலியாகினர். இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன. ஆனால் தங்கள் நாடுகளில் கொரோனா பரவல் இல்லை. உயிர் பலி இல்லை என வடகொரியா பெருமையாக கூறியது.

கண்காணிப்பில் படை வீரர்கள்
மேலும் அண்டை நாடான சீனாவில் இருந்து கொரோனா பரவிவிடக்கூடாது என வடகொரியா தனது எல்லையை மூடியது. மேலும் வேறு நாடுகளில் இருந்து வடகொரியாவில் மற்றவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் கடந்த 2020ல் வடகொரியாவின் ரியாங்காங் வடக்கு மாகாணத்தில் உள்ள ஹீசான் நகரில் கண்காணிப்புக்காக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

653 குண்டுகள் மாயம்
இந்நிலையில் ராணுவ வீரர்கள் சமீபத்தில் அங்கிருந்து முகாம் திரும்ப உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பிப்ரவரி மாதம் 25ம் தேதியில் இருந்து மார்ச் 10ம் தேதி வரை வீரர்கள் எல்லை பகுதிகளில் இருந்து முகாம் திருப்பினர். இந்நிலையில் தான் கடந்த 7ம் தேதி மொத்தம் 653 குண்டுகள் மாயமாகி உள்ளன. இதையடுத்து துப்பாக்கி குண்டுகளை படை வீரர்கள் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

ஊரடங்கு பிறப்பிப்பு
இந்நிலையில் குண்டுகளை கண்டுபிடிக்கும் வகையில் ஹீசான் நகரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கிம் ஜான் உன் பிறப்பித்துள்ளார். இந்த நகரில் 2 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில் தற்போது அவர்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். வீடுகளுக்குள் நுழைந்து வீரர்கள் குண்டுகளை தேடி வருவதாக தற்போது வெளியாகி உள்ளது. இதனை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications