"கிம்" சும்மாவே இருக்க மாட்டார் போல.. ஜப்பான் பொருளாதார மண்டலத்தை குறிவைத்த வடகொரியா.. சீறிய ஏவுகணை
கடந்த முறை தென்கொரிய கடற்படை அமெரிக்காவுடன் சேர்ந்து பயிற்சியை தொடங்கியது. இதற்கு வடகொரியா கண்டனம் தெரிவித்து ஏவுகணை சோதனையை நடத்தியது.
பியோங்யாங்: அமெரிக்காவுக்கும், தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா நேற்று சோதனை செய்திருக்கிறது. இந்த ஏவுகணை ஜப்பானின் பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதால் தற்போது ஆசிய கண்டத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
வடகொரிய மக்களுக்கு சாப்பாட்டுக்கே பற்றாக்குறை ஏற்பட்டாலும் அணு ஆயுத சோதனையை கைவிடாத ஒரு தலைவர்தான் அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன். அமெரிக்காவின் பொருளாதார தடைகளும், தென் கொரியாவின் உளவு வேலைகளும் கிம்மின் இந்த சோதனைகளை இன்னும் அதிகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய ஏவகணை சோதனையை செய்து பார்த்திருக்கிறார். கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது புதிய ஏவுகணை சுமார் 14 ஆயிரம் கி.மீ வரை செல்லும் திறன் கொண்டதாகும்.
சனிக்கிழமை மாலை சுமார் 5.22 மணியளில் இந்த ஏவுகணை வடகொரியாவிலிருந்து பறந்திருக்கிறது. சுமார் 66 நிமிடங்களுக்கு பின்னர் இது ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்திருக்கிறது. இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் நேச நாடாக இருக்கும் ஜப்பானை தரைமட்டமாக்கிவிட முடியும் என்பதை வடகொரியா மீண்டும் நிரூபித்துள்ளது. மட்டுமல்லாது, வடகொரியாவிலிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கே இந்த ஏவுகணை குறி வைக்கவும் அதிக வாய்ப்பிருக்கிறது.

ஏவுகணை சோதனை
அடிக்கடி இதுபோன்ற பல ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தாலும், இந்த வகையில் புதுமையான ஏவுகணையை எப்போதாவதுதான் வெளியில் எடுக்கிறது. இதற்கு முன்னர் கடந்த 2017ம் ஆண்டு இதே போன்ற ஒரு ஏவுகணையை வடகொரியா சோதனை செய்து பார்த்தது. பின்னர் 5 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த வகை ஏவுகணையை மீண்டும் வெளியில் எடுத்திருப்பது புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்க உள்ள நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை மூலம் இரு நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

தென்கொரியா
இந்த நடவடிக்கையால் அதிருப்தியடைந்த தென்கொரியா அமெரிக்காவுடனான கூட்டு ராணுவ பயிற்சியை தீவிரப்படுத்த முன்வந்திருக்கிறது. இதனை அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் தெரிவித்துள்ளார். வடகொரியா தரப்பில் இது குறித்து கூறுகையில், "நாங்கள் வேண்டுமென்று இந்த பயிற்சியை தொடங்கவில்லை. இதற்கு தென்கொரியாவும், அமெரிக்காவும்தான் காரணம். அவர்கள்தான் கொரிய தீபகற்பகத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளனர். ஏன் இரு நாடுகளும் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்? இதன் மூலம் கொரிய மக்களுக்கு அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?" என்ற வடகொரிய அதிபரின் சகோதரியான கிம் யோ ஜாங் கேள்வியெழுப்பியுள்ளார்.

பதிலடி
மேலும், "எதிரியின் ஒவ்வொரு அசைவையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். அதற்கேற்ப சக்திவாய்ந்த பதிலடியை எங்களால் கொடுக்க முடியும்" என்றும் எச்சரித்துள்ளார். ஆக இப்படியே காலங்காலமாக இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று விமர்சித்து ஆயுதங்களை அதிக அளவில் உருவாக்கி வருகின்றன. இதற்கு முன்னர் கடந்த 6 வாரங்களாக வடகொரியா எந்த ஏவுகணை சோதனையிலும் ஈடுபடவில்லை. அதற்கு முன்னர் தென்கொரிய கடற்படை அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா தனது ஏவுகணை பயிற்சியை அதிகரித்தது.

போர் மூளும் அபாயம்
ஒரு வாரத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது. இதன் காரணமாக நிச்சயம் கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம் ஏற்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் நல்வாய்ப்பாக அப்படி ஏதும் நிகழவில்லை. தற்போதும் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதுதான் அனைவரின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications