குண்டு, துப்பாக்கி.. இனி இப்டித்தான் குழந்தைகளுக்கு பேர் வைக்கணும்.. வடகொரியா அதிரடி!
வடகொரியாவில் குழந்தைகளுக்கு துப்பாக்கி, வெடிகுண்டு என புதிய பெயர் வைக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
பியாங்யாங்: வடகொரியாவில் உள்ள குழந்தைகளுக்கு துப்பாக்கி, வெடிகுண்டு என பெயர்களை மாற்றி வைக்கும்படி, அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெயர் என்பது ஒவ்வொருவரின் அடையாளம். அதனாலேயே தங்களது குழந்தைகளுக்கு பேர் வைக்கும்போது, பல நாள் யோசித்து பெயர்களைத் தேர்வு செய்வார்கள் பெற்றோர்கள். குறிப்பாக தங்களது குழந்தைகளின் பெயர் மென்மையாக, கேட்பதற்கு இனிமையாக, வெற்றியைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருக்கும்.
ஆனால், குழந்தைகளுக்கு வன்முறையைத் தூண்டும் வகையில் பேர் வைக்க வேண்டும் என அரசே வலியுறுத்தினால், நிச்சயம் அது பெற்றோருக்கு அதிர்ச்சியாகத்தானே இருக்கும். வடகொரியாவில்தான் இப்படி ஒரு அதிர்ச்சியை மக்களுக்கு கொடுத்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்.

புதிய உத்தரவு
அணு ஆயுத சோதனைகளால் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நாடு வட கொரியா. பார்ப்பதற்கு குழந்தைத்தனமான முகத்தோடு இருந்தாலும், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங், எப்போதுமே அதிரடி உத்தரவுகளுக்கு பேர் போனவர். இப்போதும் அப்படித்தான் வித்தியாசமான அதிர்ச்சி அளிக்கும் வகையிலான உத்தரவு ஒன்றைத் தன் நாட்டு மக்களுக்கு அவர் அளித்துள்ளார்.

மென்மையே கூடாது
அதாவது, வடகொரியாவில் உள்ள குழந்தைகளுக்கு மென்மையான பெயர்களை வைப்பதற்கு பதிலாக இனி, போக் இல் (வெடிகுண்டு), சோங் இல் (துப்பாக்கி), உய் சாங் (செயற்கைக்கோள்) என ஆயுதங்களின் பெயர்களையே சூட்ட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். இந்தப் பெயர்களை அவர் தேசபக்தியின் வெளிப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கெடு
கூடவே ஹெர்மிட் இராச்சியத்தின் எ ரி (நேசிப்பவர்) சோ ரா (சங்கு ஷெல்) மற்றும் சு மி (சூப்பர் பியூட்டி) போன்ற மென்மையான பெயர்கள் வைப்பதையும் வட கொரியா மக்கள் உடனடியாக நிறுத்த வேண்டும் என கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார். இந்த வருடத்தின் இறுதிக்குள் வடகொரியா மக்கள் தங்கள் பெயரை இப்படி புரட்சிகரமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அபராதம்
இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு அல்லது மதிக்காமல் இருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது மோசமான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவு அந்நாட்டு மக்களை அதிர்ச்சியும், கோபமும் அடைய வைத்துள்ளது. அரசின் வசதிக்கேற்ப இப்படி பெயரை மாற்ற நிர்ப்பந்திப்பது சரியல்ல என சிலர் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications