ஒரே ஒரு செல்ஃபிதான்.. கிம் ஜாங் உன்னிடம் சிக்கிய வடகொரிய ஒலிம்பிக் வீரர்.. என்ன நடக்க போகுதோ தெரியல
பியாங்யாங்: ஒலிம்பிக் தொடரின் போது தென் கொரிய வீரர்களுடன் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்ட வடகொரிய டேபிள் டென்னிஸ் வீரர் மற்றும் வீராங்கனைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு திரும்பியதும் அவர்களை கண்காணிப்பில் வைத்து இருக்கும் வடகொரியா, மூன்று கட்ட கண்காணிப்பிற்கு பிறகு அவர்களுக்கு தண்டனையும் விதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. ஒலிம்பிக் தொடரில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த தடகள வீரர்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். உலகிலேயெ தனித்த தீவு போல தனி ராஜ்ஜியம் நடத்தி வரும், வடகொரியாவை சேர்ந்த வீரர்களும் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இருந்தனர்.

உலகின் மர்ம தேசமாக அறியப்படும் நாடு வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியாது. அப்படி ஒரு இரும்புத்திரை போட்டுக்கொண்டு சர்வாதிகார ஆட்சியை அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் நடத்தி வருகிறார். வடகொரியா, அண்டை நடானா தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் பகமை காட்டி வருகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ஆயுத சோதனை நடத்தி வரும் வடகொரியா, சிறிய குற்றங்களுக்கு கூட கொடூர தண்டனை விதித்து வருகிறது.
தென் கொரியாவை பரம எதிரியாக கருதும் வடகொரியா, அந்த நாட்டின் தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பது கூட தண்டனைக்குரிய குற்றமாக வைத்து இருக்கிறது. இதனையும் மீறி யாராவது பார்த்தது தெரியவந்தால் மரண தண்டனை கூட விதிக்கப்படும். வயது வித்தியாசம் எல்லாம் பார்க்கப்படாது. இப்படி கொடூர ஆட்சி நடத்தி வரும் வடகொரியா, ஒலிம்பிக் போன்ற சர்வதேச நிகழ்ச்சிகளுக்கு விளையாட்டு வீரர்களை அனுப்புவது வியப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தனது நாட்டு வீரர்கள், பகமை நாட்டு வீரர்களுடன் நட்பு பாராட்டக் கூடாது என கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டே அனுப்பி வைத்து இருக்கிறார்கள். இத்தகைய நிலையில், தான் வடகொரியாவை செர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர்களான ரி ஜாங்க் சிக் மற்றும் கிம் கும் யாங்க் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.
இந்த போட்டியில் தென் கொரிய வீரர்கள் வெண்கலம் வென்றார்கள். முதல் பரிசை சீனா வென்றது. போட்டி முடிந்ததும் வடகொரியா வீரர்கள் இருவரும் தென் கொரிய வீரர்களுடன் சிரித்த முகத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். எதிரெதிர் துருவங்களாக விளங்கும் இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள் நட்புடன் நடந்து கொண்டது ஒலிம்பிக்கில் கவனம் பெற்றது. பலரும் இந்த நிகழ்வை வரவேற்றனர்.
ஆனால், இதுதான் வட கொரிய வீரர்களுக்கு உண்மையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாம். நாடு திரும்பியதும் இந்த வீரர்களை கண்காணிப்பில் வைத்து இருக்கும் வடகொரியா, அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. எனினும் எந்த மாதிரியான தண்டனை விதிக்கப்படக்கூடும் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications