"தற்கொலை பண்ணிக்கோங்க.." திடீரென கிம் ஜாங் போட்ட உத்தரவு! அதிர்ந்த வடகொரிய வீரர்கள்! என்ன நடக்கிறது?
கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இப்போது தீவிரமடைந்துள்ள சூழலில், ரஷ்யாவுக்காக சுமார் 10 ஆயிரம் வடகொரிய வீரர்கள் போரிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே உக்ரைன் வசம் சிக்கும் சூழல் ஏற்பட்டால், தற்கொலை செய்து கொள்ளுமாறு வடகொரிய வீரர்களுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தாலும் கூட இடையில் சில காலம் பெரியளவில் எந்தவொரு தாக்குதலும் இல்லாமலேயே இருந்தது.

ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு எல்லை தாண்டி தாக்கும் தங்களின் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்தலாம் என்று மேற்குலக நாடுகள் அனுமதி கொடுத்த உடனேயே நிலைமை மொத்தமாக மாறியது. உக்ரைன் ஒரு பக்கம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருக்கும் சூழலில், ரஷ்யாவும் கடுமையான பதிலடிகளைக் கொடுத்து வருகிறது.
ரஷ்யா உக்ரைன் போர்:
இது ஒரு பக்கம் இருக்க ரஷ்யாவுக்காகப் போராடும் வடகொரிய வீரர்களும் கூட போரில் இறங்கியுள்ளது பகீர் கிளப்பியது. ஏனென்றால் வடகொரியா உலகின் மற்ற நாடுகளில் இருந்து தனித்துவிடப்பட்டு இருக்கிறது. வடகொரியாவுக்கு ரஷ்யா உடன் மட்டும் எப்போதும் நல்லுறவு இருந்துள்ளது. தேவையான நேரத்தில் உக்ரைனுக்கு பல நல்லுதவிகளை ரஷ்யா செய்துள்ளது.
இதற்காக உக்ரைன் மோதலில் ரஷ்யாவுக்கு உதவ வடகொரியா தனது வீரர்களை அனுப்பியுள்ளது.. கடந்த அக்டோபர் மாதம் முதலே வடகொரிய வீரர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டு வந்தனர். அவர்களுக்கு முதலில் ரஷ்ய ராணுவத்தின் யூனிபார்ம் வழங்கப்பட்டு, அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் உக்ரைன் போரில் களமிறக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
வடகொரிய வீரர்கள்:
சுமார் 10,000 வட கொரிய வீரர்கள் குர்ஸ்கிலில் ரஷ்யாவுக்காகப் போரிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், முறையான போர்ப் பயிற்சி இல்லாததால் வடகொரிய வீரர்கள் அதிகம் திணறி வருகிறார்கள். இதற்கிடையே உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா சார்பில் போராடும் வடகொரிய வீரர்களுக்கு அந்நாட்டு அரசு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ரஷ்யாவுக்காகச் சண்டை போடும் வட கொரிய வீரர்களை உக்ரைன் சுற்றி வளைத்தால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று கிம் அரசு உத்தரவிட்டுள்ளதாம். உக்ரைன் வீரர்களிடம் உயிருடன் சிக்கினால் தேவையில்லாத பிரச்சினை என்பதாலேயே வடகொரிய அரசு இப்படியொரு உத்தரவைப் போட்டுள்ளதாம். தென்கொரியாவின் உளவு அமைப்பு சார்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்ய உத்தரவு:
இது தொடர்பாக உளவு அமைப்பின் தகவல்களை மேற்கோள்காட்டிய தென்கொரிய எம்பி லீ சியோங்-குவ்ன், "போரில் உயிரிழந்து கிடந்த வீரர்களை உக்ரைன் ஆய்வு செய்துள்ளது. அதில் வடகொரிய வீரர்களிடம் இதுபோல குறிப்புகள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. உக்ரைன் வீரர்கள் சுற்றி வளைத்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அல்லது தற்கொலைப் படையைப் போல வெடிகுண்டை வெடிக்கச் செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது" என்றார்.
என்ன தான் வடகொரிய அரசு இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்து இருந்தாலும் கூட ஏகப்பட்ட வீரர்களை உக்ரைன் உயிருடன் பிடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்யா வசம் இருக்கும் உக்ரைன் வீரர்களை விடுவித்தால் வடகொரிய வீரர்களை விடுவிக்கத் தயார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸி அறிவித்துள்ளார்.
உக்ரைன்:
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "வரும் காலத்தில் இன்னுமே கூட அதிகளவில் வடகொரிய வீரர்களை நாங்கள் சிறைபிடிக்கலாம். நான் சொல்வது ஒன்றுதான். ரஷ்யா அவர்கள் வசம் இருக்கும் எங்கள் வீரர்களை விடுவித்தால் எங்களிடம் உள்ள வடகொரிய வீரர்களை நாங்களும் விடுவிப்போம்" என்றார். போர் தீவிரமாகத் தொடரும் சூழலில், வரும் காலத்தில் அதிகளவிலான வடகொரிய வீரர்களைச் உக்ரைன் சிறைபிடிக்கும் என்றே தெரிகிறது.
வடகொரியாவின் இந்த உத்தரவால் சுமார் 300 வடகொரிய வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் அதையும் தாண்டி கொரிய வீரர்களை உக்ரைன் உயிருடன் பிடித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்யா வசம் இருக்கும் உக்ரைன் வீரர்களை விடுவித்தால் வடகொரிய வீரர்களை விடுவிக்கத் தயார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைன்: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "வரும் காலத்தில் இன்னுமே கூட அதிகளவில் வடகொரிய வீரர்களை நாங்கள் சிறைபிடிக்கலாம். நான் சொல்வது ஒன்றுதான். ரஷ்யா அவர்கள் வசம் இருக்கும் எங்கள் வீரர்களை விடுவித்தால் எங்களிடம் உள்ள வடகொரிய வீரர்களை நாங்களும் விடுவிப்போம்" என்றார். போர் தீவிரமாகத் தொடரும் சூழலில், வரும் காலத்தில் அதிகளவிலான வடகொரிய வீரர்களைச் உக்ரைன் சிறைபிடிக்கும் என்றே தெரிகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications