"லெட்ஸ் ஸ்டடி செல்ஃபீ புள்ள".. கட்டணம் ரூ.10,000 மட்டுமே
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள கல்லூரி ஒன்று கச்சிதமாக செல்ஃபீ எடுக்க ஒரு மாத கால படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ளது சிட்டி லிட் கல்லூரி. இந்த கல்லூரியில் பல பகுதிநேர படிப்புகள் உள்ளன. இந்நிலையில் உலகிலேயே முதன்முறையாக செல்ஃபீ குறித்த படிப்பை சிட்டி லிட் கல்லூரி அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு மாத கால செல்ஃபீ படிப்புக்கான கட்டணம் ரூ. 10 ஆயிரத்து 119 ஆகும். இந்த செல்ஃபீ படிப்புக்கான வகுப்புகள் வரும் மார்ச் மாதம் துவங்குகிறது.

எப்படி கச்சிதமாக செல்ஃபீ எடுப்பது என்பது குறித்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். ஆனால் இந்த வகுப்பில் சேர்பவர்களுக்கு செல்ஃபீ ஸ்டிக் இலவசமாக அளிக்கப்பட மாட்டாது.
பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலரும் செல்ஃபீ மோகம் பிடித்துள்ளனர். இந்நிலையில் தான் இந்த செல்ஃபீ படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படிப்புக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
லெட்ஸ் ஸ்டடி செல்ஃபீ புள்ள...












Click it and Unblock the Notifications