அமெரிக்கா: 17 வயது மகளை சுட்டுக் கொன்று தற்கொலைக்கு முயன்ற ஆந்திர பெண்
புளோரிடா: அமெரிக்காவில் வசிக்கும் 44 வயது ஆந்திர மாநில பெண் தனது 17 வயது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னை தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் இருக்கும் பர்மிங்ஹாம் கோர்ட் பகுதியில் வசிப்பவர் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த குட்டூர் ராவ். அவர் தனது மனைவி சுஜாதா(44) மற்றும் மகள் சேதனா(17) ஆகியோருடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சேதனா ஆர்லாண்டோவில் உள்ள செமினோல் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சுஜாதா தனது மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் குண்டடிபட்ட சுஜாதாவை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் நடந்தபோது ராவ் வீட்டில் இல்லை. குடும்ப பிரச்சனை தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சுஜாதா மீது சேதனாவை கொலை செய்ததற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுஜாதா இந்த கொடூரத்தை செய்யும் முன்பு அது குறித்து தனது சகோதரர் பிரசாத் சிட்டலூருவுக்கு இமெயில் அனுப்பியுள்ளார்.
சுஜாதா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் .38 காலிபர் துப்பாக்கியை வாங்கியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications