ஈரானை விடுங்க.. இஸ்ரேலிடம் உள்ள அணு ஆயுதங்களை பாருங்க! யார் உண்மையான அச்சுறுத்தல்?
டெல் அவிவ்: ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குகிறது என்று சொல்லி, இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. உண்மையில் இஸ்ரேலிடம்தான் அணு ஆயுதங்கள் உள்ளன. ஈரானிடம் இல்லை. இந்நிலையில் இஸ்ரேலின் அணு ஆயுத திறன்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அணு ஆயத விஷயத்தில் உலகம் முழுவதும் இரண்டே கொள்கைகள்தான் கடைபிடிக்கப்படுகிறது. ஆயுதம் இருக்கிறதா? இல்லையா? என்பதுதான் அது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. அதேபோல இந்தியா, பாகிஸ்தான், மற்றும் வட கொரியாவுடன் ஆகிய நாடுகளும் அணு ஆயுதத்தை கொண்டிருக்கின்றன. எனவே இந்நாடுகள் அணு ஆயுத தடை சட்டத்தில் கையெழுத்து போடவில்லை.

இதில் கையெழுத்து போடாத மற்றொரு நாடு இஸ்ரேல். ஆனால் இந்தியா ஒப்புக்கொண்டதை போல, இஸ்ரேல் தன்னிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல்' இஸ்ரேலின் நிலைப்பாடே, அந்நாடு அணு ஆயுதங்களை வைத்திருப்பதை காட்டி கொடுத்திருக்கிறது.
பெடரேஷன் ஆஃப் அமெரிக்கன் சயின்டிஸ்ட்ஸ் (FAS) எனும் அமைப்பு உலக நாடுகளின் அணு ஆயுத இருப்புகளைக் கண்காணித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. இது வெளியிட்டிருந்த அறிக்கையில், இஸ்ரேலிடம் சுமார் 90 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறது. FAS போன்ற வேறு சில அமைப்புகள், இஸ்ரேலிடம் 400 அணு குண்டுகள் இருக்கலாம் என்று கணித்திருக்கின்றன. மேலும் கூடுதலாக 200 அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய போதுமான புளூட்டோனியம் இருப்பதாகவும் இந்த அமைப்புகள் கூறியுள்ளன.
கடந்த 1986ல், இஸ்ரேலின் டிமோனா அணு ஆராய்ச்சி மையத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய மோர்ச்சாய் வனுனு, இஸ்ரேலின் அணு ஆயுதம் குறித்த தகவல்கள் பொது வெளியில் பகிர்ந்திருந்தார். அணு ஆயுதம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் உள் தகவல்களை வழங்கினார். அவை இஸ்ரேல் புளூட்டோனியத்தை அடிப்படையாகக் கொண்ட ஆயுதங்களை உற்பத்தி செய்வதைக் காட்டின.
சர்வதேச அளவில் எங்கு அணு உலை கட்டப்பட்டாலும், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) இதனை கண்காணிக்கும். அணு உலை, மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறதா? ஆயுதம் தயாரிக்க பயன்படுகிறதா என்பதை இந்த முகமை கண்காணித்து உறுதி செய்யும்.
ஈரானில் உள்ள அணு உலைகளை இன்று வரை இது கண்காணிக்கிறது. அதேநேரம், இஸ்ரேலில் உள்ள நெகேவ் அணு ஆராய்ச்சி மையத்தின் டிமோனா அணு உலை, IAEA கண்காணிப்பின் கீழ் வரவில்லை. இதுவே அந்நாடு அணு ஆயுதங்களை கொண்டிருக்கிறது என்பதற்கான மிகப்பெரிய இரண்டாவது ஆதாரமாக பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் இஸ்ரேலின் அணு ஆயுத நிலைப்பாடு தெளிவில்லாமல் இருந்தது. ஆனால், இன்று நம்பமுடியாத மறுப்பு என்கிற இடத்திற்கு சென்றிருக்கிறது. அதாவது, இஸ்ரேலில் அணு ஆயுதம் இல்லை என்று யாரும் நம்பாமல் இருக்க மாட்டார்கள் என்று மிடில்பரி நிறுவனத்தின் அணு ஆயுத நிபுணர் ஜெஃப்ரி லூயிஸ் கூறியுள்ளார்.
ஆக இப்போது மத்திய கிழக்கில் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பது இஸ்ரேல்தான். இஸ்ரேலுக்கு அமெரிக்கா நிபந்தனையற்ற முரட்டு முட்டு கொடுத்து வருகிறது. இவ்வளவு ஓட்டைகளை வைத்துக்கொண்டு ஈரானை குற்றம்சாட்டுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கடைசியில் இந்த நாடுகள்தான் ஈரானை அணு ஆயுத உற்பத்தியை நோக்கி நகர்த்த வைத்துவிடுமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications