Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடேங்கப்பா.. எந்தெந்த நாடுகளிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் - அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்து வரும் நிலையில், அணு ஆயுதத்தை கையாள்வோம் என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருந்தார். ரஷ்யா தாண்டி உலக நாடுகள் பலவற்றுள் அணு ஆயுதங்கள் இருக்கின்றன.

உலகில் சுமார் 13,080 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்களுக்குள் இருந்த பனிப்போரால் அதிக அளவு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்தன.

30-40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட அணு ஆயுதங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் தற்போது அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா

ரஷ்யா

உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பே, அணு ஆயுத போர் பயிற்சியை அதிபர் புதின் தலைமையில் செய்து பார்த்தது ரஷ்யா. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் இருந்தன. அணு ஆயுதம் தாண்டி, போர் கருவிகள், போர் விமானங்கள், படைகள், வீரர்கள் என எல்லாவற்றிலும் ரஷ்யாவின் கையே ஓங்கியுள்ளது. ரஷ்யாவிடம் தற்போது, ​​6257 மொத்த போர்க்கப்பல்களும் உள்ளன.

அணு ஆயுதம்

அணு ஆயுதம்

உலகின் மற்ற நாடுகளை விட ரஷ்யாவிடம் அதிக அணு ஆயுதங்கள் இருக்கிறது. பராமரித்து வருகிறது. 6257 அணு ஆயுதங்கள் ரஷ்யாவிடம் உள்ளன. இவற்றில், 1458 அணு ஆயுதங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. 3039 அணு ஆயுதங்கள் செயல்படுத்தப்படாததும், 1760 அணு ஆயுதங்கள் செயலற்றதுமாக தற்போது ரஷ்யாவிடம் உள்ளன. மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவை விட இது அதிக எண்ணிக்கை. இதனால் தான் உலக நாடுகள் போர் சூழலில் ரஷ்யாவைப் பார்த்து பயப்படுகின்றன.

அமெரிக்கா

அமெரிக்கா

உக்ரைனுக்கு அமெரிக்கா பல உதவிகள் செய்தாலும், நேரடியாக தங்கள் படைகளை அனுப்பாமல் இருக்கிறது. அப்படி படை அனுப்பினால், அது மற்றொரு உலகப் போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் நினைக்கின்றன. அதனால் தான் அமெரிக்கா உக்ரைனுக்கு டாலர்களில் உதவி வருகிறது. தற்போது அமெரிக்காவில் 5550 அணு ஆயுதங்கள் உள்ளன.அதில் 1389 செயல்பாட்டிலும், 2361 செயல்படுத்தப்படாமலும் உள்ளன. அதேபோல் 1800 அணு ஆயுதங்கள் செயலிழந்ததும் அமெரிக்காவில் உள்ளன.

 சீனா

சீனா

ரஷ்யா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாவிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. சீனாவிடம் 350 அணு ஆயுதங்கள் உள்ளன. ப்ரான்ஸில் 290 அணு ஆயுதங்களும், இங்கிலாந்தில் 225 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானில் 165 அணு ஆயுதங்களும், இந்தியாவில் 156 அணு ஆயுதங்களும், இஸ்ரேலிடம் 90 அணு ஆயுதங்களும், வடகொரியாவிடம் அதிகபட்சமாக 50 அணு ஆயுதங்களும் கையிருப்பில் உள்ளன.

பாதிப்பு

பாதிப்பு

கடைசியாக 1945ல் நடந்த 2ம் உலக போரில் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அமெரிக்கா ஆகஸ்ட் 6ல் ஜப்பான் ஹீரோசிமாவிலும், ஆகஸ்ட் 9ல் நாகசாகியிலும் அணுஆயுதங்களை வீசியது. இதில் அமெரிக்கா கணக்குப்படி ஒரு லட்சத்து 35 ஆயிரம் மக்கள் வசித்த ஹீரோசிமாவில் பாதிபேர் 67 ஆயிரத்து 500 பேர் இறந்ததாகவும், 1 லட்சத்து 95 ஆயிரம் பேர் வசித்த நாகசாகியில் 64 ஆயிரம் பேர் இறந்ததாகவும், 70 சதவீத கட்டடங்கள் சேதமானதாகவும் கணக்கிடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+