பிற நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பதை நிறுத்த அமெரிக்கா முடிவு: புதிய வெளியுறவு கொள்கை தயார்
வாஷிங்டன்: பிற நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைப்பதை அமெரிக்கா தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அந்த நாட்டு மக்களில் பெரும்பாலானோர் விரும்புவதால் அமெரிக்கா தனது வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டுவர உள்ளது.

ஒபாமா சூசகம்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அந்த நாட்டு மிலிட்டரி அகாடமியில் உரையாற்றுகையில் அமெரிக்க அரசு தனது வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் கொண்டுவர உள்ளதை மறைமுகமாக தெரிவித்தார்.

இவங்களுக்கு இதே வேலை
பத்தாண்டுகளுக்கும் மேலாக ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நிறுத்தப்பட்டு அந்த நாட்டு பாதுகாப்பு விவகாரங்களை தனது கையில் வைத்துள்ளது. வளைகுடா நாடுகளில் ஒரு பிரச்சினை என்றால் அழையா விருந்தாளியாக மூக்கை நுழைப்பதை அமெரிக்கா பல நெடுங்காலமாக செய்து வருகிறது.

கருத்துக் கணிப்பில் தகவல்
பியூ ஆய்வு மையம் மற்றும் வால்ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை, பொதுமக்களிடம் அமெரிக்க அரசின் வெளியுறவுக்கொள்கை தொடர்பாக எடுத்த கருத்துக்கணிப்பில் 52 சதவீதம் பேர் "அமெரிக்கா பேசாமல் தனது வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர். 1964ம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்காவில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இதுபோல கூறியுள்ளது இப்போதுதான் முதல் தடவை. அதே நேரம் அமெரிக்கா பிற நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில் தவறு இல்லை என்று 38 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதிக்கம் குறைந்துள்ளது
சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர், உக்ரைன் விவகாரம் ஆகியவற்றில் அமெரிக்க கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துவருகின்ன. 51 சதவீத மக்கள் ஒரு கருத்துக்கணிப்பில் இதை தெரிவித்துள்ளனர். அதே நேரம் 37 சதவீதம், அமெரிக்கர்கள், ஒபாமாவின் நிலைப்பாடு சரிதான் என்று கூறியுள்ளனர். உலகின் பெரிய அண்ணனாக அமெரிக்கா தன்னை நடத்திக்கொண்டிருந்த நிலை இப்போது மாறியுள்ளது என்று 53 சதவீதம் பேர் கருதுகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா உலக நாடுகளின் தலைவர் போல நடந்துகொண்டதை ஒப்பிட்டால், இப்போது அதன் ஆதிக்கம் குறைந்துள்ளதாக அம்மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம் இந்த நிலைப்பாட்டை மக்கள் வரவேற்பதும் குறிப்பிடத்தக்கது.

கொள்கையில் மாற்றம்
மக்களின் கருத்தை தொடர்ந்து, அமெரிக்கா தனது வெளியுறவு கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு அமெரிக்காவில் எழுந்துள்ளது.

ஆசிய நாடுகள் எழுச்சி காரணம்
ஆசிய நாடுகளில், ரஷ்யா அதன் அதிபர் புட்டின் தலைமையில் இப்பிராந்தியத்தின் சக்தி வாயந்த நாடாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. மற்றொரு முக்கியமான நாடான இந்தியாவும் ரஷ்யாவுடன் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது. இந்திய-ரஷ்ய உறவால் சீனாவும் வாலாட்டுவதை நிறுத்திக்கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவுடன் சீனா தற்போது நட்புக்கரம் நீட்ட தொடங்கியுள்ளது. ஆசியாவின் இம்மூன்று ராணுவ பலம் பொருந்திய நாடுகளும் நட்பாக இருப்பது அமெரிக்காவின் மூக்கை ஆசியாவுக்குள் நுழைக்க முடியாமல் செய்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் அமெரிக்கா தானாகவே தனது வேலையை பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அயல்விவகாரத்துறை பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications