வெள்ளை மாளிகையில் ஒபாமா மகள்கள் ஆடிய ஊஞ்சல்... தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை
வாஷிங்டன்(யு.எஸ்): அதிபர் ஜான் எஃப் கென்னடிக்குப் பிறகு, சிறு வயது குழந்தைகளுடன் வெள்ளை மாளிகையில் குடியேறியது ஒபாமாதான். மகள்கள் மலியா சாஷா 10 மற்றும் 7 வயது குழந்தைகள்.
குழந்தைகள் விளையாடுவதற்காக, ஒபாமா தனது சொந்த செலவில் ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டுக் கருவிகளை வெள்ளை மாளிகையில், அதிபரின் ஓவல் அலுவலக அறைக்கு எதிரே நிறுவினார்.

பள்ளியிலிருந்து வந்ததும் பிள்ளைகள் விளையாடுவதை தனது அலுவலகத்திலிருந்தே அவரால் பார்க்க முடிந்தது. அதைப் பார்த்த சில சமயங்களில் ஒபாமாவுக்கே அந்த ஊஞ்சலில் விளையாட வேண்டும் என்ற ஆசை வந்ததாம்.
தற்போது மலியாவுக்கு 18 வயது, சாஷாவுக்கு 15 வயதாகிறது. வெள்ளை மாளிகையை விட்டு வெளியே வர வேண்டிய நேரமும் ஆகி விட்டது. இந் நிலையில் பிள்ளைகளுக்காக நிறுவிய விளையாட்டுக் கருவிகளை என்ன செய்வது என்று மிஷல் ஒபாமா யோசித்தார்.
புதிய அதிபர் ட்ரம்புக்கு பரோன் என்ற 10 வயது மகன் இருக்கிறார். அவருக்கு தேவைப்படலாமோ என்று விளையாட்டுக் கருவிகளை விட்டுச்செல்லட்டுமா என்று கேட்டிருக்கிறார்கள். ட்ரம்ப் வேண்டாம் என்று சொல்லி விடவே, அவற்றை எடுத்து தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடையாக கொடுத்து விட்டார்கள்.
கடந்த ஜூலை மாதம் தான் ஒபாமாவின் மூத்த மகள் மலியா தனது 18 வது பிறந்த நாளை வெள்ளை மாளிகையில் கொண்டாடினார். 16 மற்றும் 18வது பிறந்த நாளை வெள்ளை மாளிகையில் கொண்டாடியவர் மலியா மட்டுமே என்பது குறிப்பிடத் தக்கது.
-இர தினகர்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications