படை பலம் + மகள்களுடன் "பார்க்"குக்குப் படையெடுத்த ஒபாமா
நியூயார்க்: நி்யூயார்க் நகருக்கு வருகை தந்திருந்த அதிபர் ஒபாமா, திடீர் பயணமாக அங்குள்ள பிரபலமான சென்டிரல் பார்க்குக்குச் சென்றார். பாதுகாப்புப் படையினர் புடை சூழ அவரும், மகள்கள் மலியா, சாஷா இருவரும் பார்க்குக்கு வருகை தந்தது அங்கிருந்த பொதுமக்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
ஆனால் அதிபரின் பாதுகாப்புப் படையினர்தான் பெரிய "அலப்பறை"யை செய்து விட்டனர். மோட்டார் வாகனங்களில் தபதபதவென வந்த அவர்கள் கூட்டம் சேர விடாமல் மக்களை ஆங்காங்கு ஒதுங்கிப் போகச் செய்து பரபரப்பைக் கிளப்பினர். ஆனால் ஒபாமாவும், அவரது மகள்களும் சராசரி அமெரிக்கர்கள் போல இயல்பாக நடந்து கொண்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒபாமா பார்க்கில் இருந்தபோது ஏகப்பட்ட ஹெலிகாப்டர்கள் சுற்றியபடி இருந்தன. போலீஸ் படையினர் உஷாராக இருந்தனர். ஒபாமாவின் சிறப்புப் பாதுகாப்புப் படையினரும் படு தீவிரமாந கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் போக 50 ரகசிய ஏஜென்டுகளும் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

மகள்களுடன் நியூயார்க் வந்த ஒபாமா
ஒபாமா தனது மகள்களுடன் நியூயார்க் வந்திருந்தார். மகள்களுடன் அவர் நியூயார்க்கில் பொழுதைப் போக்கினார். பல இடங்களுக்கும் அப்பாவும், மகள்களும் சென்று வந்தனர்.

படித்த ஊர்
நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில்தான் 80களில் படித்தார் ஒபாமா. அதுகுறித்த கதைகளையும் தனது மகள்களிடம் இந்த பயணத்தின்போது சொல்லி அவர்களை சந்தோஷப்படுத்தினார்.

கூட்டத்தினருடன் ஜாலி சந்திப்பு
நேற்று சென்டிரல் பார்க்குக்கு வந்த ஒபாமா யாருக்கும் தொந்தரவு இல்லாமல் படு ஜாலியாக, கேஷுவலாக வலம் வந்தார். எதிர்ப்பட்டவர்களுடன் கை குலுக்கி நின்று பேசினார்.

டிபன் சாப்பிட்டார்
இடையே ஒரு ரெஸ்டாரென்ட்டுக்கு மகள்களுடன் சென்று உணவு சாப்பிட்டார். அங்கிருந்தவர்கள் திடீரென ஒபாமாவைப் பார்த்து வியந்து போனார்கள்.

அழகு மகள்கள்
இதுகுறித்து ஒருவர் கூறுகையில், நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அவர் மிகவும் கேஷுவலாக இருந்தார். அவரது மகள்கள் மாலியா, சாஷா இருவரும் ரொம்ப அழகு என்றார்.

பிராட்வேயில் இசைக் கச்சேரி
பார்க் பயணத்தை முடித்துக் கொண்ட ஒபாமாக்கள் பின்னர் பிராட்வே சென்று அங்கு ஹாமில்டன் என்ற புதிய இசைக் கச்சேரியைப் பார்த்து ரசித்தனர்.

சீன ஹோட்டலில் தங்காத ஒபாமா
வழக்கமாக நியூயார்க்குக்கு வரும் அமெரிக்க அதிபர்கள் புகழ் பெற்ற வால்டார்ப் அஸ்டோரியா என்ற ஹோட்டலில்தான் தங்குவார்கள். ஆனால் இந்த முறை அங்கு தங்கவில்லை ஒபாமா. காரணம், இந்த ஹோட்டலை கடந்த ஆண்டுதான் ஒரு சீன நிறுவனம் வாங்கி விட்டது.

கண்காணிப்பார்கள் என்ற அச்சம்
அந்த ஹோட்டலில் ஒபாமா தங்கினால் சீனர்கள் ரகசியக் கேமராக்கள் வைத்து கண்காணிக்கக் கூடும் என்ற அச்சத்தில்தான் ஒபாமா அங்கு தங்கவில்லையாம். எனவே அதற்குப் பதில் மிட்டவுன் ஈஸ்ட் ஹில்டன் ஹோட்டலில் ஒபாமா தங்கினார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications