அமெரிக்கா வரலாற்றிலேயே மிக நீண்ட போர் முடிவுக்கு வந்தது: ஆப்கன் யுத்தம் பற்றி ஒபாமா
வாஷிங்டன்: அமெரிக்காவின் வரலாற்றியே மிக நீண்டகாலம் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் யுத்தம் முடிவுக்கு வந்துள்ளதை அந்நாட்டின் அதிபர் ஒபாமா வரவேற்றுள்ளார்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலை அடுத்து அல்கொய்தா இயக்கத்தை ஒடுக்குவதற்காக ஆப்கானிஸ்தான் அமெரிக்காவும் அதன் தலைமையிலான நேட்டோ படைகளும் முகாமிட்டன. அல்கொய்தா மற்றும் தலிபான்களுக்கு எதிராக 13 ஆண்டுகாலமாக யுத்தம் நடத்தி வந்தன நேட்டோ படைகள்.

இந்த ஆண்டுடன் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த யுத்தத்தில் மொத்தம் 2,200 அமெரிக்கா வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேட்டோ படைகள் வெளியேறுவதையொட்டி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஒபாமா, ஆப்கானிஸ்தானில் ஜனநாயகம் திரும்புவதற்கு அமெரிக்கா படைகளும் அரசியல் வல்லுநர்களும் உதவியிருக்கின்றனர். அமெரிக்காவின் வரலாற்றில் நீண்ட காலம் நீடித்த யுத்தம் முடிவுக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தான் தொடர்ந்தும் அபாயத்தையே எதிர்கொண்டிருக்கிறது. தங்களது நாட்டைப் பாதுகாப்பதில் ஆப்கான் மக்களும் பாதுகாப்புப் படையினரும் அளப்பரிய தியாகம் செய்து வருகின்றனர். அதிபராக நான் பதவியேற்ற போது ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் 1,80,000 அமெரிக்கா வீரர்கள் நிலை கொண்டிருந்தனர். தற்போது இது 15 ஆயிரத்துக்கும் குறைவாக்கப்பட்டுள்ளது. 90% அமெரிக்கா வீரர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பிவிட்டனர் என்றும் ஒபாமா கூறியுள்ளார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications