தலிபான்களின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் முடக்கம்.. யார் முடக்கினார்கள் என தெரியவில்லை!
காபூல்: ஆப்கானிஸ்தான் தலிபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டன. இதற்கான காரணமும் உடனடியாக தெரியவில்லை.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என தோஹாவில் தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதனடிப்படையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி வருகின்றன. அது போல் அங்குள்ள தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் வெளியேறி வருகிறார்கள். இந்த மாத இறுதிக்குள் படைகள் முழுவதும் வெளியேற்றப்படுவர் என அதிபர் ஜோ பிடன் தெரிவித்திருந்தார்.

முழுவதும் வெளியேற
அதே வேளையில் அமெரிக்க படைகள் முழுவதுமாக எந்த குழப்பமும் இன்றி வெளியேறுவது கடினமானது என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தலிபான்கள் எவ்வாறு ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைப்பது என்பது குறித்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள். அதில் ஆப்கனை ஆள போவது யார்?, யார் யார் எந்தெந்த துறைகளை வகிப்பது என்பது குறித்த ஆலோசனைகளை நடத்தப்பட்டு வருகின்றன.

ஆட்சிக்கு அஞ்சி
தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி அங்குள்ள மக்களும் கூட்டம் கூட்டமாக நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். இந்த நிலையில் தலிபான்களின் இணையதள பக்கங்களான பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்டவை முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளது.

முடக்கத்தால் பரபரப்பு
ஆங்கிலம், உருது, அரபு, பஷ்டோ, டரி உள்ளிட்ட மொழிகளில் இவர்களது இணையதள பக்கங்கள் தொடங்கப்பட்டன. இதன் மூலம் தங்கள் கருத்துகள் மற்றும் செய்திகளை உலக நாடுகளுக்கு தலிபான்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.

யார் முடக்கினார்கள் என தெரியவில்லை
மேலும் இந்த பக்கத்தை யார் முடக்கினார்கள் என்ற தகவல்கள் தெரியவில்லை. இந்த பக்கங்கள் நேற்று முதல் முடக்கப்பட்டது. இந்த இணையதள பக்கங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் தலிபான்கள் புதிய இணையதள பக்கத்தை தொடங்க ஏற்பாடுகள் செய்திருக்கலாம். அதன் காரணமாக இந்த பக்கங்கள் முடக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

ட்விட்டர் பக்கம்
தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித்தின் ட்விட்டர் பக்கம் நீக்கப்படவில்லை. இந்த ட்விட்டர் கணக்கிற்கு 3 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். பேஸ்புக்கை போல் கூகுளின் யூடியூபின் தலிபான்கள் பயங்கரவாத இயக்கம் என்பதை உணர்ந்து அவர்கள் தங்கள் கணக்குகளை செயல்படுத்த முடியாத அளவிற்கு முடக்கப்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு தகவல்கள் வருகின்றன.

வெளிநாட்டு பயங்கரவாத இயக்கம்
வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்கள் குறித்த பட்டியலை அமெரிக்கா வைத்துள்ளது. அந்த பட்டியலில் தலிபான்கள் அமைப்பின் பெயர் இல்லை. எனினும் அந்த இயக்கம் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. தலிபான்களின் இணையதள பக்கங்கள் முடக்கம் தொழில்நுட்ப கோளாறா இல்லை யாரேனும் முடக்கினார்களா என தெரியவில்லை. 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய ஆட்சியை போல் இப்போதும் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். மேலும் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என தெரிவித்துள்ள அவர்கள், ஹரியத் சட்டத்தின்படி ஆட்சி நடக்கும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications