ஒலிம்பிக் வீரர்களுக்கு ஆணுறை எதுக்கு? டயர்ட் ஆக மாட்டாங்களா! செக்ஸுக்கு பின்னால் இருக்கும் அறிவியல்!
ரோம்: இத்தாலி நாட்டில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்றிருக்கும் வீரர்கள் தற்போது புதிய பிரச்சனையை எதிர்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணுறைகள் தீர்ந்துவிட்டன. எனவே கூடுதல் ஆணுறைகளை கேட்டு வருகின்றன. ஒலிம்பிக் என்பதே விளையாட்டு போட்டிகள் நிறைந்தது தான். இதில் பங்கேற்கும் வீரர்கள் செக்ஸ் வைத்துக்கொண்டால் அவர்கள் சோர்வடைந்துவிட மாட்டார்களா? என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
அப்புறம் எதுக்கு ஆணுறை கேட்கிறார்கள் என்றும் கேள்வி எழுந்திருக்கிறது. உண்மைதான் செக்ஸ் வைத்துக்கொண்டால் உடல் சோர்வடையும். இருப்பினும் கடந்த 1988 சியோல் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வீரர்களுக்கு ஆணுறை வழங்கப்பட்டு வருகிறது.

சமூக காரணம் என்ன?
இதற்கு பின்னால் அறிவியல் மற்றும் சமூக காரணங்கள் இருக்கின்றன. ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் இடத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் ஒன்று கூடுவார்கள். அங்கு ஒருவர் மற்றவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது, அங்கு HIV போன்ற பாலியல் நோய்கள் பரவலாம். எனவே, இதை தவிர்க்கவே ஆணுறைகள் வழங்கப்படுகின்றன. ஆணுறைகள் வழங்கப்படுவதற்கு பின்னால் இருக்கும் சமூக காரணம் இதுதான்.
அறிவியல் காரணம்
அறிவியல் காரணம் கொஞ்சம் வித்தியாசமானது. அதாவது டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்களுக்கான ஹார்மோன். இது அதிக அளவில் சுரப்பதன் மூலம் புரத சேர்க்கையை ஊக்குவிக்கும். இது தசைகள் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதிக டெஸ்டோஸ்டிரோன் கொண்டிருப்பவர்களால் மைதானத்தில் அதிக சக்தியை வெளிப்படுத்த முடியும். அதிக எடையை தூக்க முடியும்.
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்
விளையாட்டு வீரர்களுக்கு எலும்பு அடர்த்தி அதிகமாக இருக்க வேண்டும். இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன், எலும்பு மஜ்ஜையை தூண்டி எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும். மட்டுமல்லாது இந்த ஹார்மோன் ஆக்ரோஷத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். இது இரண்டும் விளையாட்டு வீரர்களுக்கு மிக முக்கியமான அம்சம்.
செக்ஸும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனும்
சரி இதுக்கும் அணுறைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. செக்ஸ் வைத்துக்கொள்வதன் மூலம் இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகரிக்கும். விளையாட்டுக்கு 1-2 மணி நேரத்திற்கு முன்னர் செக்ஸ் வைத்தால் உடல் சோர்வடையும் என்பது உண்மைதான். ஆனால் 10-12 நேரத்திற்கு முன்னர், அதாவது முந்தைய நாள் இரவு செக்ஸ் வைத்துக்கொண்டால் நன்கு தூக்கம் வரும்.
ஏனெனில், செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது உடலில் கார்டிசோல் ஹார்மோன் குறையும். இது ஸ்ட்ரெஸ் ஹார்மோன். ஸ்ட்ரெஸ் குறைந்தாலே நன்றாக தூக்கம் வரும். நல்ல தூக்கம் அடுத்த நாள் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்கும். எனவேதான் ஒலிம்பிக் வீரர்கள் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள். இதனால்தான் அவர்களுக்கு ஆணுறை தேவைப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications