OMICRON: ஆளையே க்ளோஸ் பண்ணிடும் ஒமிக்ரான்.. லேசா நினைக்காதீங்க.. வார்னிங் தந்த உலக சுகாதார நிறுவனம்
ஒமிக்ரான் தொற்று பரவல் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது
ஜெனிவா: மிரட்டி கொண்டிருக்கும் ஒமிக்ரான் தொற்று, லேசாகத்தான் பாதிப்புகளையே தரும் என்று அலட்சியமாக இருக்க கூடாது என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
கொரோனா வைரஸ் இப்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது... மற்றொருபுறம் உருமாறிய புதிய வகை ஒமிக்ரான் வைரசும், இந்தியாவுக்குள்ளும் பல்வேறு நாடுகளுக்கும் ஊடுருவி விட்டது..
மிககுறைந்த நாட்களிலேயே நூற்றுக்கணக்கான நாடுகளில் பரவி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.. அத்துடன் உயிரிழப்பையும் தந்து வருகிறது.

தகவல்கள்
இதையடுத்து, எண்ணற்ற ஆய்வாளர்களும், மருத்துவர்களும், ஒமிக்ரான் குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தினம் தினம் ஒமிக்ரான் பாதிப்பு குறித்த முக்கிய தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.. டெல்டா போன்ற வைரஸ்களை ஒப்பிடும்போது ஒமிக்ரான் வைரஸ் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் தரப்பில் பொதுவாக சொல்லப்பட்டு வருகிறது.

டெல்டா
இந்நிலையில், உயிருக்கு டெல்டாவை விட ஓமிக்ரான் பாதிப்பு குறைவு என்றாலும், அதற்காக அதனை அலட்சியமாக கருத வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதானம் வார்னிங் தந்துள்ளார்.. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதானம் கூறியதாவது: "ஒமிக்ரான் வைரஸை, டெல்டாவோடு ஒப்பிடும்போது, பாதிப்பு என்னவோ குறைவானதாகத்தான் தோன்றும்..

ஒமிக்ரான்
அதேபோல, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இந்த ஒமிக்ரான் லேசான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எடுத்து கொள்ள முடியாது... இந்த வைரஸ் தாக்கி எத்தனையோ பேர் உலகில் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. இதற்கு முன்பு பரவிய வேரியண்ட்டுகளை போலவே, ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சையில் உள்ளனர்.. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வருகிறது..

அதிக பாதிப்பு
இதில், மரணம்கூட நடந்து கொண்டுதான் இருக்கிறது.. இதுதான் உலக மருத்துவ நிறுவனங்களுக்கே பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கிறது.. கடந்த வாரம் மட்டும், உலகம் முழுவதிலும் 9.5 மில்லியன் ஒமிக்ரான் கேஸ்கள் பதிவாகி இருக்கின்றன.. இது முந்தைய வாரத்தைவிட 71 சதவீதம் அதிகமாகும்.. நம்ம நாட்டை பொறுத்தவரை, 2-ம் அலை பரவலுக்கு டெல்டாவைவிட, ஒமிக்ரான் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.

தாக்குதல்
ஆனால், அந்த வைரஸின் வீரியத்தன்மை குறித்து இதுவரை சரியாக, முழுமையாக எதுவுமே தெரியவில்லை... இதற்கிடையே, நோயின் பாதிப்பு மட்டும் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே வருகிறது.. எனவே, மக்கள் அனைவரும் அனைத்து விதமான வழிமுறைகளையும் முறையாக கடைப்பிடிக்க வேண்டும், ஒமிக்ரான் லேசானது என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம்" என்று அதானம் அறிவுறுத்தியும், எச்சரித்தும் உள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications