394 கி எடை கொண்ட உலகிலேயே குண்டான மனிதர் மரணம்... லாரியில் ஏற்றி இறுதி ஊர்வலம்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகத்திலேயே மிகவும் குண்டான மனிதர் என கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த அமெரிக்காவைச் சேர்ந்த மேனுவல் உரைப் கடந்த திங்களன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 48.

அமெரிக்காவின் மெக்சிக்கோ நக2ரத்தில் உள்ள மாண்ட்டெர்ரி பகுதியைச் சேர்ந்தவர் மேனுவல். சிறுவனாக இருந்த போதே சுமார் 250 பவுண்டு எடையுடன் மற்றவர்களை மிரளச் செய்த மேனுவல் வளர்ந்து வாலிபனாக ஆன போது 280 பவுண்ட் எடையை கொண்டிருந்தார்.

இவர் கடந்த 2006ம் ஆண்டு உலக சாதனைகளை பதிவு செய்யும் ‘கின்னஸ்' நிறுவனத்தின் மூலம் உலகின் ‘குண்டு மனிதர்' என அங்கீகரிக்கப் பட்டார். அப்போது அவரது எடை 1,230 பவுண்டு, அதாவது 560 கி.

திருமணம்...

திருமணம்...

கடந்த 2008ம் ஆண்டு தனது 42 வயதில் 38 வயதான கிளாடியா சாலிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேனுவல். நீண்ட காலத்துக்குப் பிறகு மேனுவல் திருமணத்திற்காக வீட்டை விட்டு 'கிரேன்' போன்ற 'ஃபோர்க் லிஃப்ட்' மூலம் திருமண அரங்கத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

உடல்நலப் பாதிப்பு...

உடல்நலப் பாதிப்பு...

தனக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கட்டிலில் படுத்தபடியே, அனைத்து வகை உணவுகளையும் சாப்பிட்டு வந்த மேனுவலுக்கு ஈரல் மற்றும் இதயம் சார்ந்த பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

எடைக்குறைப்பு...

எடைக்குறைப்பு...

அதிக எடையால் சிரமப்பட்ட மேனுவல், டாக்டர்களின் ஆலோசனையின் படி உணவை சரிபாதியாக குறைத்தார். அதன் பலனாக அவரது எடையும் 394 கிலோவாக குறைந்தது.

மரணம்...

மரணம்...

இந்நிலையில், இம்மாதம் 2-ம் தேதி அன்று இதய துடிப்பில் ஏற்பட்ட மாற்றத்துக்காக சிகிச்சை பெற்று வந்த மேனுவல், சிகிச்சைப் பலனின்றி கடந்த திங்களன்று மரணமடைந்தார்.

லாரியில் ஊர்வலம்...

லாரியில் ஊர்வலம்...

மரணமடைந்த மேனுவலின் உடலை ஒரு 'பெரிய' பெட்டியில் வைத்து, லாரியில் ஏற்றிச் சென்ற உறவினர்கள், மாண்ட்டெர்ரி பகுதியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்தனர்.

மின்தகனம்...

மின்தகனம்...

மின் தகன மேடையின் கதவுகளை மேனுவலின் உடல் முழுமையாக நுழையும் அளவுக்கு திறந்த பின்னர் தான் தகனம் செய்ய முடிந்தது என அந்நாட்டு செய்திகளில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+