என்னாது பூமி சூரியனை சுற்றி வருதா?: விஜய் சேதுபதி ஸ்டைலில் கேட்கும் அமெரிக்கர்கள்
சிகாகோ: அமெரிக்கர்களில் நான்கில் ஒருவருக்கு பூமி சூரியனை சுற்றி வருகிறது என்ற அடிப்படை விவரம் கூட தெரியவில்லை என்பது ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
நேஷனல் சயன்ஸ் பவுன்டேஷன் அமெரிக்கர்களிடையே ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் 2 ஆயிரத்து 200 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடம் இயற்பியல், உயிரியல் குறித்து 10 கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் சராசரி மதிப்பெண் 6.5 ஆகும்.

கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 74 சதவீதம் பேருக்கு தான் பூமி சூரியனை சுற்றி வருகிறது என்பது தெரிந்துள்ளது. 48 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே மனிதன் விலங்கில் இருந்து வந்தது தெரிந்துள்ளது.
அறிவியலுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று மூன்றில் ஒரு பங்கேற்பாளர் தெரிவித்துள்ளார். கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 90 சதவீதம் பேர் மருத்துவ கண்டுபிடிப்புகள் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications