உலகின் கடைசி வெள்ளை காண்டாமிருகத்திற்கு 24 மணி நேர கமாண்டோ பாதுகாப்பு!
நைரோபி: உலகின் கடைசி வெள்ளை நிற ஆண் காண்டாமிருகத்தை வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற, அதற்கு 24 மணி நேர கமாண்டோ பாதுகாப்பு வழங்கி பாதுகாத்து வருகிறது கென்யா.
விலை மதிப்பு மிக்க அவற்றின் கொம்புகளுக்காக வெள்ளைக் காண்டாமிருகங்கள் சட்டவிரோதமான வகையில் வேட்டையாடிக் கொல்லப் படுகின்றன. இதனால், தற்போது அந்த இனமே அழிவின் விளிம்பில் உள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மிருகக்காட்சி சாலையில் இருந்த ஆங்கலீஃபூ என்ற ஆண் வெள்ளை காண்டாமிருகம் ஒன்று முதுமை காரணமாக 44 வயதில் உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது, உலகில் வெள்ளை காண்டாமிருகங்கள் மொத்தத்தில் ஐந்து மட்டுமே எஞ்சியுள்ளன.
£14, 697 raised overnight by 506 people! What a lovely surprise to wake up to!!We're overwhelmed by your support...
Posted by The Ol Pejeta Conservancy on Tuesday, April 14, 2015
கென்யாவில் மூன்று...
இவற்றில் ஒன்று கலிஃபோர்னியாவிலும், மற்றொன்று செக் குடியரசின் மிருகக்காட்சி சாலையிலும் உள்ளன. இது தவிர மீதமுள்ள மூன்றும் கென்யாவின் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது. கென்யாவில் உள்ள மூன்று வெள்ளைக் காண்டாமிருகங்களில் ஒன்று ஆண்.
தோல்வி...
மரணத்திற்கு முன்னதாக ஆங்கலீஃபூவை அதே மிருகக்காட்சிசாலையில் அங்கிருந்த பெண் கண்டாமிருகமான நோலாவுடன் சேரவிட்டு இனப்பெருக்கம் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.
செயற்கைக் கருவூட்டல்...
எனவே, வெள்ளைக் காண்டாமிருகங்களின் எண்ணிக்கையைப் பெருக்க உலகமே கென்ய வனவிலங்கு சரணாலயத்தைத் தான் நம்பியுள்ளது. அங்குள்ள மூன்று காண்டாமிருகங்களும் இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை என சரணால அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, செயற்கை முறையில் அவைகளை கருவுறச் செய்யும் முயற்சிகள் மூலமே அபூர்வ வெள்ளை காண்டாமிருக இனத்தைக் காப்பாற்ற முடியும்.
கமாண்டோ பாதுகாப்பு...
எனவே, வேட்டைக்காரர்களிடமிருந்து வெள்ளைக் காண்டாமிருகங்களைக் காப்பாற்ற சரணாலய அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, உலகத்தின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகத்திற்கு 24 மணி நேர கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது.
எதிர்காலத் திட்டம்...
பொதுவாக காண்டாமிருகங்களின் ஆயுட்காலம் 50 ஆண்டுகள் ஆகும். தற்போது கென்யாவில் உள்ள ஆண் வெள்ளை காண்டாமிருகத்திற்கு தற்போது 43 வயது ஆகிறது. எனவே, மீதமுள்ள ஆண்டுகளில் அதன் மூலம் செயற்கைக்கருவூட்டல் முறையில் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்க கென்ய அரசு திட்டமிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications