ஆபரேஷன் ஹெரோஃப்.. பாகிஸ்தானில் திடீர் பதற்றம்! பலுச் பிரிவினைவாதப் போராளிகள் தாக்குதல்!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பலுச் பிரிவினைவாதப் போராளிகள் நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதல்களில் 10 பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சுமார் 70 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். இன் 12 இடங்களில் நடந்த இத்தாக்குதல்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைக் குண்டுவெடிப்புகள் மூலம் நிகழ்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி இது தொடர்பான தகவல்கள் கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, "தீவிரவாதிகள் இன்று காலை 12க்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தொடங்கினர். குறிப்பாக குவெட்டா, பஸ்னி, மாஸ்டங், நுஷ்கி மற்றும் குவாடார் மாவட்டங்கள் முழுவதும் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன" என்று AFP செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Operation Herof Phase 2 Pakistan Army

என்ன நடந்தது?

இறப்பு எண்ணிக்கை குறித்துப் பேசிய அந்த அதிகாரி, 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 10 பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். குவெட்டாவில் மட்டும் 4 போலிசார் உயிரிழந்தனர். ஊடகங்களில் பேச அனுமதி இல்லாததால், பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையின் பேரில் அவர் இத்தகவலை வழங்கியுள்ளார்.

யார் பொறுப்பு?

இந்தத் தாக்குதல்களுக்கு பலுச் விடுதலை இராணுவம் (BLA) பொறுப்பேற்றது. ராணுவத் தளங்கள், காவல் மற்றும் சிவில் நிர்வாக அதிகாரிகளை இலக்காக கொண்டு தாக்கியதாக கிளர்ச்சிக் குழு தெரிவித்தது. தாய்நாட்டைக் காக்க புதிய கட்டமாக, ஆபரேஷன் ஹீரோப் இரண்டாம் கட்டம் அறிவிக்கப்பட்டதாக பலுச் விடுதலை இராணுவம் கூறியிருக்கிறது.

தாக்குதல் தடுப்பு

கிளர்ச்சிச் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பல நகரங்களில் அவசரகாலக் குழுக்கள் நிறுத்தப்பட்டன. தாக்குதலை உறுதிப்படுத்திய ஒரு மூத்த அதிகாரி, "இது ஒருங்கிணைக்கப்பட்டது, ஆனால் மோசமாகச் செயல்படுத்தப்பட்டது" எனக் கூறினார். இதுவரை பொதுமக்களுக்கு எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

"மோசமான திட்டமிடல் மற்றும் பயனுள்ள பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் நாங்கள் இந்த தாக்குதலை முறியடித்தோம்" என்று அதிகாரி தெரிவித்தார். விரைவான பாதுகாப்பு நடவடிக்கையால் கிளர்ச்சியாளர்களால் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். நிலைமை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.

தொடர் தாக்குதல்

தாது வளம் மிக்க பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில், பல பத்தாண்டுகளாகப் பிரிவினைவாதக் கிளர்ச்சியை பாகிஸ்தான் எதிர்கொண்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானை ஒட்டியுள்ள இந்த மாகாணத்தில், கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்புப் படைகள், வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் அப்பகுதிக்கு வெளியே உள்ளவர்களை மீண்டும் மீண்டும் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+