சாவு பயத்தை காட்டிய இந்தியா.. திமிராக பேசிய பாகிஸ்தான் போர்க்கப்பல்களுடன் ஓட்டம்.. திக்திக் சம்பவம்
இஸ்லாமாபாத்: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் உச்சக்கட்ட போர் நடந்த சமயத்தில் அந்த நாட்டின் கடற்படைகள் நம் நாட்டை எதிர்த்து சண்டையிடாமல் புற முதுகை காண்பித்து போர்க்கப்பல்களுடன் ஓட்டம் பிடித்தது தொடர்பான பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான சேட்டிலைட் போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தான் மீது ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது. கடந்த மே 7ம் தேதி நள்ளிவு முதல் 10ம் தேதி வரை 4 நாட்கள் ஏவுகணைகள் மூலம் நம் நாடு பாகிஸ்தானை குறிவைத்து தாக்கியது.

இதில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதேபோல் ராணுவ தளம், விமான தளங்கள் என்று முக்கிய 12 இடங்கள் பலத்த சேதமடைந்தன. குறிப்பாக பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் நிலைக்குலைந்து போன பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரி தொலைபேசியில் கெஞ்சியதால் போர் நிறுத்தத்துக்கு நம் நாடு ஒப்புக்கொண்டது. போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு பாகிஸ்தான் வாய்ச்சவடால் விடுத்து வருகிறது. உயிருக்கு பயந்து மண்டியிட்டதை அந்த நாட்டு மக்களிடம் மறைக்கும் வகையில் போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று தம்பட்டம் அடித்து வருகிறது. அதுமட்டுமின்றி சிந்து நதி நீர் விவகாரத்தில் அணுஆயுதம், ஏவுகணை தாக்குதல் நடத்துவோம் என்றும் பூச்சாண்டி காட்டி வருகிறது.
இப்படி வாய்க்கொழுப்பில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டவர்கள் பேசி வரும் நிலையில் தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உச்சத்தில் இருந்தபோது பாகிஸ்தான் படை வீரர்கள் புறமுதுகு காண்பித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
மோதல் உச்சத்தில் இருந்த சமயத்தில் பாகிஸ்தான் படைகள் அச்சத்தில் பயந்து ஓடியுள்ளன. கராச்சி கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் இருந்த போர்க்கப்பல்கள் வணிக முனையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேபோல் இன்னொரு தரப்பு போர்க்கப்பல்கள் ஈரான் நோக்கி சென்றுள்ளது. ஈரானில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகிஸ்தானின் மேற்கு துறைமுகமான குவாடருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தியாவை எதிர்த்தால் போர் பதற்றம் இன்னும் அதிகரிக்கும். அதோடு போர்க்கப்பல்கள் உள்பட கடற்படைகளுக்கு அதிக சேதம் ஏற்படும். இதனால் இந்தியாவை எதிர்ப்பதை விட மண்டியிடுவோம். இதன்மூலம் போர்க்கப்பல்களை காப்பாற்றலாம் என்று பாகிஸ்தான் இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இதனை சேட்டிலைட் போட்டோக்கள் உறுதி செய்துள்ளன.
அதாவது மே 8ம் தேதி கராச்சி துறைமுகம் குறித்த செயற்கைகோள் போட்டோக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது போர்க்கப்பல்கள் அதற்கான இடங்களில் நிறுத்தி வைக்கப்படவில்லை. மாறாக வணிக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா போர்க்கப்பல்களை குறிவைத்து தாக்கலாம் என்ற அச்சத்தில் அதனை மூடிமறைக்க பாகிஸ்தான் திட்டமிட்டது. இந்தியா மனிதாபிமானம் கொண்ட நாடு. இதனால் வணிக துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தாது. மீறி நடத்தினால் அங்கு பல நாடுகளின் கப்பல்கள் இருக்கும். இது உலக பிரச்சனையாக மாறும் என்று நினைத்த பாகிஸ்தான் தனது போர்க்கப்பல்களை வணிக துறைமுகத்துக்குள் கொண்டுள்ளது.
இதுபற்றி இந்தியாவின் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி எஸ்சி சுரேஷ் பங்காரா கருத்து தெரிவித்துள்ளார். இவர் நம் நாட்டின் கடற்படை பிரிவில் துணை அட்மிரலாக பணியாற்றியவர். தெற்கு கடற்படை கமாண்டிங் ஆபிசராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 1971ம் ஆண்டு நடந்த போரின்போது கராச்சி துறைமுகத்தின் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தியவர். இந்நிலையில் தான் எஸ்சி சுரேஷ் பங்காரா கூறுகையில், ‛‛ பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் மே 7ம் தேதி நடந்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் விழிப்புடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் போர்க்கப்பல்களை தயார் நிலையில் வைக்கவில்லை. இது அவர்களின் இயலாமையை காட்டுகிறது.
வணிக துறைமுக பகுதியில் போர்க்கப்பல்களை நிறுத்துவது என்பது ஏவுகணை தாக்குதலில் இருந்து அதனை பாதுகாக்கும் நடவடிக்கை தான். இது அந்த நாட்டின் கடற்படையின் நம்பிக்கையின்மையை காட்டுகிறது. இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ராணுவ விமானங்களுடன் மக்கள் பயணிக்கும் விமானங்களை அனுப்பியது. இது பாகிஸ்தானிடம் வலிமை இல்லாததையும், கோழைத்தனத்தையும் காட்டுகிறது'' என்றார். இதன்மூலம் பாகிஸ்தான் வாய் மட்டுமே பேசுகிறது. அந்த நாட்டின் ராணுவம் உள்பட முப்படைகளும் நம் நாட்டை எதிர்க்க திராணியின்றி இருப்பது உறுதியாகி உள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications