Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காமெனி கொல்லப்பட்ட பிறகும் ஈரானிலிருந்து பாயும் ஏவுகணைகள்! என்ன நடக்குது? அச்சத்தில் மத்திய கிழக்கு

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனி நேற்றிரவு, அமெரிக்கா+இஸ்ரேல் நடந்திய கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இருப்பினும், ஈரானிலிருந்து எதிரி நாடுகளை நோக்கி ஏவுகணைகள் தொடர்ந்து பாய்ந்து வருவதால், மத்திய கிழக்கு முழுவதும் அச்சம் அதிகரித்திருக்கிறது.

ஈரானை பொறுத்தவரை காமெனி தான் உட்ச தலைவர். அவர் சொல்வதுதான் இறுதி முடிவு. ஆனால், அவர் சரியில்லை என்றால் அதை மாற்றவும் அந்த நாட்டு சட்டத்தில் இடம் இருக்கிறது.

Operation True Promise 4

தாக்குதல் எப்படி சாத்தியம்?

இப்படி இருக்கையில், ஈரான் அணுகுண்டு தயாரிக்கிறது என்று சொல்லி, கமெனியை அமெரிக்காவும் இஸ்ரேலும் கொன்றிருக்கிறன. இதனையடுத்து அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள அரபு நாடுகள் மீது ஈரான் தன்னிச்சையாக தாக்குதல் நடத்தி வருகிறது. தங்கள் தலைவர் கொல்லப்பட்டிருப்பதால் ராணுவம் மற்றும் புரட்சி காவல்படைகள் ஆக்ரோஷமாக தாக்குல் நடத்தியுள்ளன. கமெனி இறந்த பின்னரும் இந்த தாக்குதல் எப்படி சாத்தியமானது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஈரானின் உள்கட்டமைப்பு

ஈரானை பொறுத்தவரை அந்நாட்டு அரசு இரண்டு பிரிவாக இருக்கும். ஒன்று அதிகாரப்பூர்வ ராணுவம். இன்னொன்று புரட்சி காவல்படை. இதில் புரட்சி காவல்படைதான் மிகவும் ஆபத்தானது. இருப்பினும் இரண்டு படைகளுக்கும் உத்தரவிடும் அதிகாரம் உட்ச தலைவருக்குதான் இருக்கிறது. ஆனால், போர் போன்ற சூழலில், உட்ச தலைவரின் உத்தரவு இல்லாமல் புரட்சி காவல்படைகள் தானாக இயங்கும். இதுதான் தற்போதைய தாக்குதலுக்கு காரணம்.

உத்தரவிட உட்ச தலைவர் இல்லாத காரணத்தால், யார் தங்களில் வலிமையானவர்கள் என்பதை நிரூபிக்க அடுத்தடுத்து தாக்குதலை ராணுவமும், புரட்சிகர காவல்படைகளும் நடத்தி வருகின்றன.

பழிவாங்க சபதம்

கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கச் சபதம் செய்துள்ள இந்த அமைப்புகள், ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணை, ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. துபாய், கத்தாரின் தலைநகரான தோஹா பகுதிகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
அமெரிக்கக் கூட்டாளிகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தாருக்கு, எதிரிகளுடன் இணைந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஈரான் இதன் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்பரேஷன் ட்ரூ பிராமிஸ் 4

ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படை அறிக்கையின்படி, 'ஆப்பரேஷன் ட்ரூ பிராமிஸ் 4'-ன் ஐந்தாவது அலையின் கீழ், ஜெபல் அலி துறைமுகத்தில் அமைந்திருந்த அமெரிக்கக் கப்பலுக்கான வெடிமருந்து கப்பல் 4 ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டது. அத்தாக்குதலில் அது முற்றிலும் சேதமடைந்து நொறுக்கப்பட்டது என பாதுகாப்புப் படை குறிப்பிட்டது.

குவைத்தின் அப்துல்லா முபாரக் பகுதியில் உள்ள அமெரிக்கக் கடற்படைத் தளம் 4 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 12 ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டது. இத்தாக்குதலில் அதன் அடிப்படைக் கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு, ஏராளமான அமெரிக்கப் படையினர் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளதாக பாதுகாப்புப் படை தெரிவித்தது.

அச்சத்தில் மத்திய கிழக்கு

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கக் கப்பல்களுக்கு எரிபொருள் கொண்டு சென்ற எம்.எஸ்.டி-வகுப்பு போர் ஆதரவுக் கப்பல், ஈரானின் குவாட்ர் 380 ஏவுகணைகளால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதல்கள் எதிரிகளுக்கு நரகத்தின் வாசல்களை திறந்து வைத்துள்ளன.

மோதல்கள் தொடங்கியபின், உலகிலேயே பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான துபாய் விமான நிலையம் மூடப்பட்டது. முன்னதாக, துபாயின் புகழ்பெற்ற நிலத் தீவான 'தி பாம்' மற்றும் ஆடம்பர ஹோட்டலான 'புர்ஜ் அல் அரப்' ஆகியவற்றை ஈரான் தாக்கியிருந்தது. ஈரானிய விமானப்படை, பாரசீக வளைகுடா நாடுகள் மற்றும் ஈராக்கிய குர்திஸ்தானில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதும் குண்டுவீசியது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+