Oscars 2025: ஜோ சல்டானா, கீரன் கல்கின் சிறந்த துணை நடிகர்களாக தேர்வு.. மேடையிலேயே கண்கலங்கிய நடிகை
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த துணை நடிகருக்கான விருதை கீரன் கல்கின் மற்றும் ஜோ சல்டானா ஆகியோர் பெற்றுள்ளனர். விருதைப் பெற்றதும் கீரன் கல்கின் மேடையிலேயே கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஹாலிவுட்டின் முக்கியமான இரவு என்று ஆஸ்கர் விருதை வர்ணணை செய்வார்கள். ஹாலிவுட் மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சிக்காக மொத்த திரையுலகும் அந்த இரவு ஒன்றிணைவார்கள். ஆஸ்கர் விருதுகள் திரை உலகில் மிகவும் பிரபலமானது.

அந்த வகையில் 97வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 2024 இல் வெளியிடப்பட்ட திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் 23 பிரிவுகளில் இந்த விருது அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும்,நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்கி வருகிறார். 97வது ஆஸ்கர் அகாடமி விருதுகள் அறிவிப்புக்கு முன்னதாக ரெட் கார்பெட் அணிவகுப்பில் பல்வேறு திரைக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜாக்ஸ் ஆடியர்ட் இயக்கிய 'எமிலியா பெரஸ்' என்கிற ஸ்பானிய திரைப்படம் ஆஸ்கரில் இந்த ஆண்டு அதிக பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பிரெஞ்சு எழுத்தாளர் போரிஸ் ரசோனின் நாவலான இகோட் அத்தியாயத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
எமிலியா பெரஸ் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றூள்ளார் நடிகை ஜோ சல்டானா. 13 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்ட எமிலியா பெரஸ் படத்துக்கு முதல் விருது வழங்கப்பட்டுள்ளது. அப்போது அவர் மேடையில் கண்கலங்கி பேசிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எனது திறமையை அங்கீகரித்த அகாடமிக்கு மிகுந்த நன்றி. என்னை பரிந்துரைத்தவர்களுக்கு மிக்க நன்றி.
நீங்கள் எனக்கு கொடுத்த அன்பு, உங்களால் கிடைத்த இந்த பரிசை நான் என்றும் மறக்க மாட்டேன். எனது திரைப்படக் குழு மற்றும் நடிகர்களுடன் எனது விருதைப் பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, "ஏ ரியல் பெயின்' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை கீரன் கல்கின் வென்றுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications