ஆஸ்கர் விருது விழா: சிறந்த படம், இயக்குநருக்கு கடும் போட்டி
லாஸ் ஏஞ்சல்ஸ்: கலைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் இந்திய நேரப்படி திங்கள்கிழமை காலை முதல் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோரின் பட்டியல் ஜனவரி மாதம் 24-ஆம் தேதி பரிந்துரை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி விருது வழங்கப்படுகிறது.

24 பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் இந்த 89-ஆவது விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் டால்பி திரையரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர்கள் உள்பட பல்வேறு திரைத்துறையினர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
ஹாலிவுட் நடிகர்கள் மாட் டாமன், ரயன் கோஸ்லிங், மெரில் ஸ்ட்ரீப், தேவ் படேல், சேத் ரோகன், சல்மா ஹேக், நடிகை சோபியா பவுட்ல்லா, வாரன் பியட்டி, ஏமி ஆடம்ஸ், லியானார்டோ டிகாப்ரியோ உள்பட பலர் கலந்துகொண்டு விருது விவரங்களை அறிவித்து வருகின்றனர். ஜிம்மி கிம்மெல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த விழாவில் பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் கலந்து கொண்டதாக தெரிகிறது.
சிறந்த படங்கள் பட்டியலில் அரெய்வல், ஃபென்சஸ், ஹாக்சா ரிட்ஜ், ஹெல் ஆர் ஹை வாட்டார், ஹிட்டன் பிகர்ஸ், லா லா லேண்ட், லயன், மான்செஸ்டர் பை தி சீ, மூன்லைட் ஆகியவை இடம்பெற்றன.
சிறந்த நடிகர்கள் பட்டியலில் கேஸி அப்லெக், ரயன் கோஸ்லிங், விக்கோ மோர்டென்சென், டென்செல் வாஷிங்டன் ஆகியோரும், சிறந்த நடிகைகளுக்கான பட்டியலில் இஸபெல் ஹப்பெர்ட், ருத் நெக்கா, நடாலி போர்ட்மேன், எம்மா ஸ்டோன், மெரில் ஸ்டரீப் ஆகியோரும் உள்ளனர்.
இயக்குநர் டேமியன் சேசலின் லா லா லேண்ட் திரைப்படம் 14 பிரிவுகளின் கீழும், இயக்குநர் டேனிஸ் வில்லினூவேயின் அரெய்வல் திரைப்படம் 8 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த துணை நடிகருக்கான விருது மூன்லைட் படத்தில் பணியாற்றிய மஹேர்ஷாலா அலிக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது பென்சஸ் படத்தில் பணியாற்றிய வையோலா டேவீஸுக்கு வழங்கப்பட்டது. இவர் முதல்முறையாக விருதை பெற்றார். சிறந்த துணை நடிகருக்கான வாய்ப்பை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் இழந்தார்.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்துக்கான விருது சூசைட் ஸ்குவாட் படத்தில் பணியாற்றிய அலெக்சான்ட்ரோ பெர்டோ லேசி, கிறிஸ்டோபர் ஆலன் நெல்சன், ஜியோர்ஜியா கிரிகோரினி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருது பான்டாஸ்டிக் பீஸ்ட் அண்ட் வேர் டு பைன்ட் என்ற படத்தில் பணியாற்றிய கோலீன் அட்வுட்டுக்கு வழங்கப்பட்டது.சிறந்த முழுநீள ஆவணப்படத்துக்கான விருது ஓ.ஜே. மேட் இன் அமெரிக்கா படத்துக்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஒலி அமைப்புக்கான திரைப்படமாக அரைவல் படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த ஒலி கலவைக்கான விருது ஹாக்ஷா ரிட்ஜ் படத்தில் பணியாற்றிய கெவின் ஓ' கான்னெல், பீட்டர் கிரேஸ், ஆன்டிரைட், ராபர்ட் மேக்கென்ஸி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த வெளிநாட்டு மொழிக்கான விருது தி சேல்ஸ்மேன் படத்துக்கு வழங்கப்பட்டது, ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளதால் அதன் இயக்குநர் அஸ்கர் ஃபர்ஹாதி விழாவில் பங்கேற்பதை புறக்கணித்தார்.
சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருது பைபர் படத்தின் திரைக்கதை அமைப்பாளர் ஆலன் பாரிலாரோவுக்கும், சிறந்த முழுநீள அனிமேஷன் விருது ஜுடோபியா படத்தில் பணியாற்றிய இயக்குநர்கள் பைரான் ஹோார்ட், ரிச் மூரே ஆகியோருக்கு கிடைத்துள்ளது.
சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது ஜாக்கிசானுக்கு வழங்கப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications