ஓமனில் தமிழர்கள் நடத்த போகும் 'OTSM மெகா கொண்டாட்டம்".. பங்கேற்க போகும் விஜய் டிவி பிரபலங்கள்
மஸ்கட்: ஓமன் நாட்டின் மஸ்கட்டில் ஓமன் தமிழ் சமூக ஊடகம் ( OTSM) OTSM மெகா கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழ் கலாச்சார நிகழ்வினை நடத்த போகிறது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டார் விஜய் டிவி பிரபலங்கள் பங்கேற்க உள்ளார். இந்த விழா வரும் அக்டோபர் 20ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வளைகுடாவில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். துபாய், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமானோர் வசிக்கிறார்கள். இங்கு அடிக்கடி தமிழர்களின் கலாச்சார நிகழ்வுகள் நடைபெறும். இந்த விழாவில் தமிழர்கள் ஒன்று கூடி மகிழ்வார்கள். இதில் தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்ளவும் செய்வார்கள்,.

அந்த வகையில் ஓமன் நாட்டின் மஸ்கட்டில் ஓமன் தமிழ் சமூக ஊடகம் ( OTSM) OTSM மெகா கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழ் கலாச்சார நிகழ்வினை நடத்த போகிறது. ஓமனில் OTSM என்ற பெயரில் ஓமன் தமிழ் சமூக ஊடகம் இயங்கி வருகிறது.
2021ம் ஆண்டு முதல் அங்குள்ள இளம் தமிழர்கள் குழுவினரால் அமைக்ப்பட்டது தான் OTSM குழு. இந்த OTSM குழு ஓமானில் உள்ள தமிழ் மக்களை ஒன்றுபடுத்துவதுடன் அடிக்கடி கலாச்சார நிகழ்வுகளை நடத்தி வருகிறது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றில் பிரபலமான ஓமன் தமிழ் ஊடகமாக திகழ்கிறது.
இந்நிலையில் OTSM குழுவினர், பொங்கல் விழா, தமிழ் புத்தாண்டு நிகழ்வுகள், தமிழ் கவிதைப் போட்டிகள், குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகள் போன்ற பல கலாச்சார நிகழ்வுகளை ஆண்டு முழுவதும் நடத்தி வருகிறது.

அந்த வகையில் "OTSM மெகா கொண்டாட்டம்" என்ற பெயரில் தமிழ் கலாச்சார நிகழ்வு நடத்தப்பட உள்ளது. இதில் ஓமன் நாட்டைச் சேர்ந்த ஏராளமான தமிழ் திறமையாளர்கள் நடனம், பாடல்கள், DJ நிகழ்ச்சிகளை நடத்த போகிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் ஸ்டார் விஜய் டிவியின் பிரபல கேபிஒய் பாலா மற்றும் "சிடபிள்யூசி குரைஷி" ஆகியோர் நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்த போகிறார்கள்.
இதேபோல் மாற்றுத்திறனாளி பாடகி ஜோதி பாடல்களை பாட உள்ளனர். இந்த நிகழ்வு வரும் அக்டோபர் 20ம் தேதி அன்று மஸ்கட்டின் ரூவியில் உள்ள அல் ஃபலாஜ் ஹோட்டலில் நடைபெற உள்ளது . இந்த நிகழ்வினை காண ஓமனில் வாழும் தமிழர்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications