கண்ணீரில் பாகிஸ்தான்.. பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 320 பேர் பலி.. மக்களை மீட்க திணறும் அரசு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வெளுத்து வாங்கும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் கடந்த 48 மணி நேரத்தில் 320 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வரும் நிலையில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக பாகிஸ்தானில் பல இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக, பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள இந்த மகாணம் மலையையொட்டி அமைந்துள்ளது. இதன் தலைநகர் பெஷாவர் ஆகும்.
இந்த மாகாணத்தில் கடந்த 48 மணி நேரத்தில் பல இடங்களில் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மாகாணத்தில் உள்ள புனர், பஜௌர், ஸ்வாட், ஷாங்க்லா, மன்சேரா மற்றும் பட்டாகிராம் உள்ளிட்ட இடங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பேரிடர் பாதிக்கப்பட்ட இடங்களாக அவை அடையாளம் காணப்பட்டுள்ளது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. வாகனங்கள் தண்ணீரில் அடித்து செல்லபட்டுள்ளன. 320 பேர் வரை பலியாகி உள்ளனர்.
வெள்ளம் இன்னும் குறையாததால் மீட்பு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகின்றனர். 9 மாவட்டங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 2000க்கும் அதிகமானவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி கைபர் பக்துன்வா மீட்பு பிரிவின் செய்தி தொடரபாளர் பிலால் அகமது ஃபைசி கூறுகையில், ‛‛கனமழை, பல பகுதிகளில் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளால் மீட்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. கனரக இயந்திரங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களை கொண்டு செல்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்பு படையினர் நடந்தே செல்லும் ிலை உள்ளது. உயிருடன் இருக்கும் மக்களை முதலில் பத்திரமாக வெளியேற்ற முயற்சித்து வருகிறோம்'' என்றார்.
மேலும் பாகிஸ்தானின் சில இடங்களில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வ மையம் கணித்துள்ளது. இதில் கைபர் பக்துன்க்வாவின் சில இடங்கள் உள்ளதால் மக்கள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படும் நிலை உருவாக்கி உள்ளது. இதுதவிர பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், வடக்கு கில்கிட் பால்டிஸ்தான் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையாலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கும் மக்கள் இறந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications