பேஸ்புக்கில் உபயோகிக்கும் 900 புதிய வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் சேர்ப்பு
லண்டன்: பேஸ் புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பயன்படுத்தும் புதிதாக தோன்றிய 900 புதிய வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
பேஸ்புக், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களின் வருகைக்கு பிறகு அதில் இளைஞர்கள் புதிதாக உருவாக்கி பயன்படுத்தும் வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் புதியதாக உருவாகியுள்ள அந்த வார்த்தைகளும் தனக்கான அந்தஸ்த்தைப் பெற்றுள்ளன.

கால மாற்றத்தில் புதிய வார்த்தைகள்:
ஆக்ஸ்போர்டு அகராதி குறிப்பிட்ட கால இடைவெளியில் சமூகத்தில் புழக்கத்தில் இருக்கும் புதிய புதிய வார்த்தைகளை தனது அகராதியில் சேர்த்து தனது ஆங்கில வார்த்தைகளை மேம்படுத்தி வருகிறது.

இணைய தலைமுறைகளான இளைஞர்கள்:
இணையதள யுகத்திற்கு பிறகு பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தி வருகின்றன.

குறுஞ்செய்தி வார்த்தைகள்:
கடந்த சில வருடங்களில் குறுஞ்செய்தியில் வார்த்தைகளை சுருக்கி பயன்படுத்திய இளைய தலைமுறையினர் இன்றைக்கு இணைய தலைமுறைகளாக மாற்றம் பெற்று புதிய புதிய வார்த்தைகளை புழங்கி வருகின்றனர்.

டிக்-டாக் செய்தியாளர்:
இதுகுறித்து ஆக்ஸ்போர்டு அகராதி தயாரிப்பு குழுவின் தலைவர் கேத்தரின் கான்னர், "சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகு பல்வேறு புதிய வார்த்தைகளை மக்கள் பயன்படுத்துகின்றனர். டிக்-டாக் என்ற வார்த்தை முன்பு கடிகாரத்தின் ஒலியை குறித்து வந்தது. தற்போது செய்திகளை முழுமையாக வரிசைப்படி தரும் செய்தியாளரை அது குறிப்பிடும் சொல்லாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

900 புதிய வார்த்தைகள்:
இது போன்று பல்வேறு புதிய சொற்கள் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதுபோன்ற புதிய 900 வார்த்தைகளை புதிய அகராதியில் இணைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications