அடேய்களா.. கிஸ்ஸடிக்க சொன்னது அவிங்கள.. நீ வாயை வச்சுட்டு சும்மா இருடா!
திருமணத்தில் சிறுமிக்கு சிறுவன் முத்தம் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மணிலா: கல்யாணம் என்றாலே கலாட்டாதான்.
அதாவது ஜாலியான கலாட்டா. அதுவும் அந்த மாப்பிள்ளை, பொண்ணை வைத்துக் கொண்டு இந்த போட்டோகிராபர்களும், வீடியோ கிராபர்களும் செய்வார்கள் பாருங்க.. செம காமெடியாக இருக்கும். இந்தக் கல்யாணத்திலும் கூட ஒரு கலாட்டா இப்படித்தான்.. ஆனால் இது செம காமெடி.
பிலிப்பைன்ஸில் மணிலாவில் நடந்த கல்யாணத்தில் நடந்த காமெடி கலாட்டா இது. சற்றே ரொமான்டிக்கானதும் கூட. ஆல்பிரட் லு மற்றும் ஜமைக்கா ஆகியோருக்கு இடையே நடந்த கல்யாணம் இது. கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிந்தது. அதன் பிறகு சர்ச் வாசலில் வைத்து ஒரு குரூப் போட்டோ எடுக்கத் திட்டமிட்டார் புகைப்படக் கலைஞர் ஜான் கிளக்.
[ ஏன் சாமி.. ஒய் திஸ் கொலை வெறி கோபம்?? ]

சிறுவன், சிறுமி
மாப்பிள்ளைக்குப் பின்னால் மாப்பிள்ளைத் தோழர்களையும், பெண்ணுக்குப் பக்கத்தில் தோழிகளையும் வரிசையாக நிறுத்தினார். மாப்பிள்ளை, பெண்ணுக்கு முன்பு ஒரு குட்டிப் பையனும், ஒரு சிறுமியும் நிறுத்தப்பட்டனர். போட்டோகிராபரின் நோக்கம் மாப்பிள்ளை, பெண்ணை முத்தமிட வேண்டும். அதை அழகாக படம் பிடிக்க வேண்டும் என்பதே.

கண்ணை மூடிக்கோங்க
சிறார்கள் இதைப் பார்க்கக் கூடாது, மனசு கிலேசம் ஆயிடக் கூடாது இல்லையா. எனவே புகைப்படம் எடுப்பதற்கு முன்பு அந்தக் குட்டிப் பையனையும், பாப்பாவையும் கண்ணை மூடிக்கோங்க என்று கூறினார் ஜான். அவர்களும் அதுபோலவே செய்தனர். அந்தப் பையன் மட்டும் எதுக்கு கண்ணை மூடச் சொல்றாங்க என்று லைட்டாக கையை எடுத்துப் பார்க்க செய்தான். ஸ்டிரிக்ட்டாக கண்ணை மூடச் சொல்லி எல்லாவற்றையும் செட் செய்த ஜான் கிளிக் செய்வதற்கு முன்பு கிஸ் பண்ணுங்க என்று கூறினார் பாருங்க.. அடுத்து நடந்ததுதான் செம காமெடி.

குட்டிப் பையனின் வேகம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு அழுத்தமாக முத்தம் கொடுத்தார். ஆனால் அதை விட பெரிய காமெடி அவர்களுக்கு முன்பு அரங்கேறியது. அதாவது அந்த குட்டிப் பையன் படு வேகமாக சிறுமியின் உதட்டில் முத்தமிட்டான். மாப்பிள்ளைக்கு முத்தமிடச் சொன்னதை தனக்கு இடப்பட்ட உத்தரவாக நினைத்துக் கொண்டு படு வேகமாக அதைச் செய்தான் அந்தக் குட்டிப் பையன்.
வைரல் வீடியோ
குட்டிப் பையனின் செயலைப் பார்த்து மாப்பிள்ளை, பெண் உள்பட அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரித்தனர். எந்த விரசமும் இல்லாமல் குழந்தைத்தனத்துடன் நடந்து விட்ட இந்த திடீர் கிஸ்ஸிங் காட்சி அடங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அடேய்களா.. ஆர்டரை கரெக்டாக புரிந்து கொண்டு செயல்படுங்கடா..!
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications