ஆபரேஷன் சிந்தூரில்.. சேதம் கொஞ்சம் ஜாஸ்திதான்! ஒருவழியாக ஒப்புக்கொண்டது பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத்: இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தானுக்கு சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இன்று செய்தியாளர்களை சந்திருந்த அவர், "36 மணி நேர இடைவெளியில் 80 ட்ரோன்களை இந்தியா, எங்களை எல்லைக்குள் அனுப்பியது. இதில் 79 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், ஒரேயொரு ட்ரோன் மட்டும் விமானப்படை தளத்தை தாக்கியிருக்கிறது.

நூர் கான், சர்கோதா, ரஃபிக்கி, ஜேக்கபாபத், முரிட்கே விமானப்படை தளம் உட்பட, மொத்தம் 11 இடங்களை இந்தியா குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இருப்பினும் இந்த தாக்குதல்கள் சிறிய அளவிலானதுதான்" என்று கூறியுள்ளார். நேற்று வரை எந்த பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று சொன்னவர்கள், இன்று தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டிருக்கின்றனர். இருப்பினம் தாக்குதல் சிறிய பாதிப்பை ஏற்படுத்தியதாக சொல்வதெல்லாம், கதை அடித்து விடுவதை போல இருக்கிறது என பல்வேறு தரப்பினரும் சந்தேகம் கிளப்பியுள்ளனர்.
பின்னணி என்ன?
கடந்த ஏப்ரல் மாதம், ஜம்மு காஷ்மீரின் பகஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை எற்படுத்தியிருந்தது. தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து இயங்கும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. இந்நிலையில் இந்தியா இந்த தீவிரவாதிகளின் நிலைகளை குறி வைத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இதில் தீவிரவாதிகள் பலரும் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் மிகவும் துல்லியமானதாக மேற்கொள்ளப்பட்டது. இப்படி இருக்கையில் இந்த தாக்குதலால் சிறிய பாதிப்புதான் ஏற்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கூறியிருப்பதை, இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் தில்லான் கண்டித்திருக்கிறார். பாகிஸ்தானின் சமா டிவி தகவலின்படி ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட 138 பேருக்கு வீர திருமகன் விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கை 400-500 வரை இருக்கலாம். இஷாக் தார் பொய் சொல்கிறார் என தில்லான் கூறியுள்ளார்.
மே-7ம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. மே-9ம் தேதி பாக்., பிரதமர் தலைமையில் அவசர கூட்டம் கூட்டப்பட்டது. இதனையடுத்து மே-10ம் தேதி நூர் கான் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியது. இந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கு கிலியை ஏற்படுத்தியது என்பது உண்மை. ஆபரேஷன் சிந்தூர் குறித்து கடந்த ஜூலை மாதம் பாக். பிரதமரின் ஆலோசகர் ராணா சானாவுல்லா கூறுகையில், இந்தியா பிரமோஸ் ஏவுகணைில் அணு ஆயுதத்தை ஏவுகிறதா? எங்களுக்கு 30-45 விநாடிகள் வரை மட்டுமே அவகாசம் இருந்தது என கூறியிருந்தார்.
தாக்குதலையடுத்து மே-13ம் தேதி மேக்சர் செயற்கைக்கோள் புகைப்படம் பாகிஸ்தானின் சேதங்களை தெளிவாக காட்சிப்படுத்தியிருந்தது. அதில், நூர் கான், சர்கோதா, ஜேக்கபாபத் ஆகிய விமானப்படை தளங்கள் கடுமையாக சேதமடைந்திருந்தது தெளிவாக தெரிந்தது. ஆனால், இன்று பேட்டியளித்த பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் லேசான சேதம் என்று மழுப்பியிருக்கிறார்.
-
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
மீண்டும் உயிர் பெறும் "இந்தியா.." மம்தா எடுக்கும் முயற்சி.. விஜய் உள்ளே.. ஸ்டாலின் வெளியே! -
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
“இந்தியா என்னை 100% நம்பலாம்.. நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்!” ஓபனாக பேசிய டிரம்ப்! -
காரை அடிக்கடி துடைத்தால் இப்படியொரு பிரச்சனை வருமாம்.. தெரியாம கூட இதை மட்டும் செய்ய வேண்டாம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications