ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில்.. என்னை பதுங்கு குழிக்குள் பதுங்க சொன்னார்கள்! - பாக். குடியரசுத் தலைவர்
இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, தன்னை பதுங்கு குழிக்குள் பதுங்கிக்கொள்ள அறிவுறுத்தியதாக பாகிஸ்தான் குடியரசுத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி கூறியிருக்கிறார். இவரது பேச்சு இந்தியாவின் தாக்குதல் எந்த அளவுக்கு தீவிரமாக இருந்தது என்பதை உணர்த்துவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் 18வது நினைவு தினக்கூட்டம் நேற்று, சிந்து மாகாணத்தின் லர்கானாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த அவர், மேற்குறிப்பிட்டவாறு பேசியிருக்கிறார்.

பதுங்கு குழியும் மரணமும்
அவர் மேலும் பேசியதாவது, "அன்று நடந்த சம்பவம் இப்போதும் எனக்கு நினைவு இருக்கிறது. இராணுவச் செயலாளர் என்னிடம் வந்து, ஐயா, போர் தொடங்கிவிட்டது. நான்கு நாட்களுக்கு முன்னரே போர் வரப்போகிறது. பதுங்கு குழிக்கு போவோம் என்று சொன்னார். அதற்கு நான், தியாகம் வர வேண்டுமானால், அது இங்கேயே வரும். தலைவர்கள் பதுங்கு குழிகளில் இறப்பதில்லை. அவர்கள் போர்க்களத்தில் இறக்கிறார்கள். பதுங்கு குழிகளில் உட்கார்ந்து இறப்பதில்லை என்று கூறினேன்.
இந்த தாக்குதலை பொறுத்தவரை, பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது, ஆயினும் தன்னைத் தற்காத்துக் கொள்ள முழுமையாகத் தயாராக உள்ளது. ஆயுத மோதலில் இந்தியாவுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ராணுவ தளபதி அசீம் முனீரை நான் பாரட்டுகிறேன்" என்று பேசியிருந்தார்.
போரும் பின்னணியும்
கடந்த ஏப்ரல் மாதம், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து இயங்கும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்த, இந்தியா இதனை முறியடித்தது.
இந்தியாவின் பதிலடி
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது மட்டுமல்லாது, பதில் தாக்குதலையும் நடத்தியது. இதில் பாகிஸ்தானின் விமானப்படை தளம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அதை ஒப்புக்கொள்ளவில்லை. நூர் கான், சர்கோதா, ரஃபிக்கி, ஜேக்கபாபத், முரிட்கே விமானப்படை தளம் உட்பட, மொத்தம் 11 இடங்களை இந்தியா டார்கெட் செய்த அட்டாக் செய்தது. ஆனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சொன்னவர்கள், தற்போது இந்த பாதிப்புகளை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
ஆதாரமில்லாத தகவல்கள்
இப்படி இருக்கையில் நேற்று இந்த உண்மையை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். மே 10ம் தேதி அதிகாலையில் பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல இந்தியா 80 டிரோன்களை அனுப்பியதாகவும் அதில் 79 ட்ரோன்களை அழித்ததாகவும், 7 இந்திய போர் விமானங்களை அழித்ததாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கான ஆதாரங்கள் இப்போது வரை வெளியிடப்படவில்லை என்பது தனிக்கதை.
போருக்கு விரும்பவில்லை
பாக்., குடியரசுத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி மேலும் கூறுகையில், "மே 10 அன்று காலை 8:17 மணியளவில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரூபியோ தன்னைத் தொடர்பு கொண்டு, இந்தியா போர் நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாகவும், பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளுமா என்றும் கேட்டார். நாங்கள் ஒருபோதும் போர் செய்ய விரும்பவில்லை என்று நான் பதிலளித்திருந்தேன்" என்று கூறியிருந்தார்.
-
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications