உச்சத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போர்.. என்ட்ரி கொடுத்த சீனா - ரஷ்யா - ஈரான்.. பெரும் பதற்றம்
காபூல்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான மோதல் இன்று போராக வெடித்துள்ளது. இருநாடுகளின் ராணுவ வீரர்களும் எல்லையில் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது இருநாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் தான் இந்த போரில் வல்லரசு நாடுகளான சீனா, ரஷ்யா மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உடன் எல்லைகளை பகிர்ந்து வரும் ஈரானும் என்ட்ரி கொடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளனர். இருநாடுகளும் 2,600 கிலோமீட்டர் தொலைவுக்கு எல்லைகளை பகிர்ந்து வருகின்றன. ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டில் அமெரிக்க படைகள் வெளியேறிய பிறகு தாலிபான்கள் ஆட்சியை பிடித்தன. அப்போது பாகிஸ்தான், தாலிபான்களுக்கு ஆதரவு வழங்கியது.

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் மற்றும் பாகிஸ்தான் இடையே பகை ஏற்பட்டது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இருநாடுகள் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.
ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தாலிபான், பலூச் லிபரேஷன் ஆர்மி எனும் அமைப்பினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து எல்லையில் மோதல் நடந்து வருகிறது.
தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான்
மேலும் பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் தற்கொலை படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன் பின்னணியில் ஆப்கானிஸ்தான் இருப்பதாக பாகிஸ்தான் கூறியது. அதுமட்டுமின்றி தங்கள் நாட்டின் மீது தற்கொலை படை தாக்குதல்கள் நடத்தும் நபர்களுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனை ஆப்கானிஸ்தான் மறுக்கிறது.
இதற்கிடையே தான் கடந்த 22ம் தேதி பாகிஸ்தான் போர் விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் உள்ள பகுதிகளில் வான்வெளி தாக்குதல் நடத்தியது. பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் இறந்தனர்.
ஆப்கானிஸ்தான் பதிலடி
இதற்கு நேற்று இரவில் தாலிபான்கள் பதிலடி கொடுத்தன. இரவில் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் பதற்றம் அதிகரித்தது. இதற்கிடையே தான் போர் தொடங்கி விட்டதாக பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
இருதரப்பிலும் பலி
தங்களின் பதிலடி தாக்குதலில் 133 ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுள்ளனர். 27 ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டுள்ளது. 9 ராணுவ நிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது என பாகிஸ்தான் கூறியுள்ளது.
அதேவேளையில் தாலிபான்கள் தரப்பில், ''55 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 19 ராணுவ நிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வான்வெளி தாக்குதலில் நங்கர்ஹாரில் 8 ஆப்கானிஸ்தான் போராளிகள் கொல்லப்பட்டு 11 பேர் காயமடைந்ததுள்ளனர். 13 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகள் இடையேயான மோதலால் தற்போது பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா – சீனா – ஈரான்
இந்நிலையில் தான் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போரில் ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் என்ட்ரி கொடுத்துள்ளன. அதாவது பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும். போர் எதற்கும் தீர்வல்ல. இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தைக்கு உதவி செய்வதாக இந்த 3 நாடுகளும் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை முக்கிய செய்தியை கூறியுள்ளார்.
சீனா சொல்வது என்ன
சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவ் நிங் கூறுகையில், ''பழிவாங்கும் தாக்குதல்கள் எதற்கும் தீர்வாக அமையாது. இருநாடுகள் இடையோன மோதலை தணிக்க சீனா மத்தியஸ்தம் செய்யவும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை நடத்த தயாராக இருக்கிறோம்'' என்று கூறியுள்ளார்.
சீனாவை எடுத்து கொண்டால் பாகிஸ்தானுடன் நெருக்கமாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான் ராணுவ தளவாடங்களை சீனாவிடம் தான் வாங்கி பயன்படுத்தி வருகிறது. அதேபோல் ஆப்கானிஸ்தானுடனும், சீனா தனது உறவை பலப்படுத்தி வரும் நிலையில் மோதலை கைவிட இருநாடுகளுக்கும் சீனா வலியுறுத்தி உள்ளது.
ரஷ்யாவின் கருத்து
அதேபோல் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தரப்பில், ''ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டும்'' என்று கூறியுள்ளது.
ரஷ்யாவை எடுத்து கொண்டால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் பகையின்றி நட்பாக செல்கிறது. இருப்பினும் சமீபகாலமாக ரஷ்யா, ஆப்கானிஸ்தானின் தாலிபான்களுடன் அதிக நெருக்கம் காண்பித்து வருகிறது.
ஈரான் நிலைப்பாடு
மேலும், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தனது எக்ஸ் பக்கத்தில், "இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையை எளிதாக்கி, புரிதலையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்த வேண்டும். இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க ஈரான் தயாராக உள்ளது" என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உடன் ஈரான் எல்லைகளை பகிர்ந்து வரும் நிலையில் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் எனவும், இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications