பாகிஸ்தானில் ஓடிப் போய் திருமணம் செய்த ஜோடி தலை துண்டித்து கொலை
லாகூர்: பாகிஸ்தானில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பெண் வீட்டாரால் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் முவாபியா பீபி(23). அவர் பக்கத்து கிராமமான ஹசனாபாத்தைச் சேர்ந்த சாஜத் அகமதை(27) காதலித்துள்ளார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே முவாபியா கடந்த 18ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி நீதிமன்றத்தில் சாஜதை திருமணம் செய்து கொண்டார்.
முவாபியா திருமணம் முடிந்து ஹசனாபாத்தில் இருப்பது அவரது குடும்பத்தாருக்கு நேற்று தெரிய வந்தது. இதையடுத்து முவாபியாவின் தந்தை தில்ஷாத் உள்பட 7 பேர் ஹசனாபாத் கிளம்பிச் சென்றனர். அங்கு அவர்கள் முவாபியா மற்றும் அவரது கணவரை வீட்டுக்குள் இருந்து இழுத்து வந்து நடுத்தெருவில் வைத்து துன்புறுத்தி அவர்களின் கை, கால்களை கட்டிப் போட்டு தலையை வெட்டி கொலை செய்தன. இந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர் கூட அதை தடுக்க முன் வரவில்லை.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 7 பேரையும் கைது செய்தனர். சாஜத் முறைப்படி வந்து பெண் கேட்கும் முவாபியா வீட்டில் சம்மதிக்கவில்லையாம். அதன் பிறகே அவர்கள் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்ய முடிவு செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications