அணை கட்டப் போன அப்பாவி தொழிலாளர் 20 பேர் சுட்டுக்கொலை... பாகிஸ்தானில்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 20 அப்பாவித் தொழிலாளர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள கிராமம் ஒன்றில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களின் பழங்குடியினத்தை சேர்ந்த அப்பாவி தொழிலாளர்கள் சிலர் முகாமிட்டிருந்தனர். அணை கட்டும் பணிக்காக இவர்கள் அங்கு முகாமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அந்தக் கிராமத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் தொழிலாளர்கள் மீது கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மூன்று தொழிலாளர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை, பலுசிஸ்தான் மாகாண முதல்வர் அப்துல் மாலிக் பலுச் நேரில் பார்வையிட்டார்.
பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் மீது, பலுசிஸ்தான் பழங்குடியின ஆதரவு பயங்கரவாதிகள், நீண்ட காலமாகவே விரோத மனப்பான்மை கொண்டுள்ளனர். அதன் அடிப்படையிலேயே இந்த தாக்குதல் நிகழ்ந்தப் பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications