Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எவ்வளவு அடி வாங்கினாலும் திமிர் குறையல! இந்தியா பற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் சர்ச்சை பேச்சு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. அப்போது இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சரணடைந்தது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், இந்தியாவை மிரட்டும் வகையில் பாகிஸ்தான் தொடர்ந்து அடாவடியாகப் பேசி வருகிறது. அப்படித் தான் அந்நாட்டின் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இந்தியா பற்றி தேவையில்லாமல் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியிருந்தது. அதில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. அதில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த மோதலுக்குப் பிறகு இந்தியா மீது அத்துமீறித் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முயன்றது. இருப்பினும் இந்தியா தரமான பதிலடியைக் கொடுத்தது.

Pakistan Defence Minister tries to intimidate India even after facing defeat in Operation Sindoor

அடி வாங்கிய பாகிஸ்தான்

இந்தியாவில் பாகிஸ்தானால் பெரியளவில் தாக்குதல் நடத்த முடியவில்லை. நமது வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தான் ஏவுகணைகளைக் காலி செய்தது. மறுபுறம் இந்தியா நடத்திய தாக்குதல்களில் பாகிஸ்தான் கதிகலங்கிப் போனது. பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியில் கூட இந்தியா வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது.

இன்னும் அடங்கல

இந்தளவுக்கு அடி வாங்கிய பிறகும் கூட பாகிஸ்தான் அடங்கவில்லை.. தொடர்ந்து தேவையில்லாமல் இந்தியாவை மிரட்டும் வகையிலேயே பேசி வருகிறது. அப்படித் தான் இப்போது பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் சில கருத்துகளைக் கூறியுள்ளார். எதிர்காலத்தில் பாகிஸ்தானுடன் மோதினால் இந்தியா குப்பையில் புதைக்கப்படும் என்பது போல அவர் பேசியிருக்கிறார்.

சமீபத்தில் தான் பாகிஸ்தானை இந்திய ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி எச்சரித்திருந்தார். பாகிஸ்தான் உடனடியாகத் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இல்லை என்றால் உலக வரைபடத்தில் இருந்தே பாகிஸ்தான் அழிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்தச் சூழலில் சில நாட்களில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் இதுபோல கூறியுள்ளார்.

திமிர் பேச்சு

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்திய ராணுவ மற்றும் அரசியல் தலைமை தேவையில்லாத கருத்துகளைக் கூறியுள்ளனர். இந்தியா பாகிஸ்தான் மோதலில் இழந்த புகழை மீட்டெடுக்க ஒரு தோல்வியடைந்த முயற்சி தான் இது. மீண்டும் அவர்கள் பாகிஸ்தானுடன் மோதினால் கடவுள் அருளால், மிக மோசமான பாதிப்பைச் சந்திக்க நேரிடும். குப்பைக்கு நடுவே தள்ளப்படுவார்கள்" என்றார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகே இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்று தோற்றுப் போனது பாகிஸ்தான் தான். மேலும், இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் கிட்டத்தட்ட வெள்ளைக் கொடி காட்டி சரண்டர் ஆனதும் பாகிஸ்தான் தான். அப்படியிருக்கும் போது இந்தியா பற்றி பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தேவையில்லாத சர்ச்சை கருத்துகளைக் கூறியிருக்கிறார்.

இந்தியா சொல்வது என்ன

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ராணுவ தளபதி திரிவேதி, "இந்தியா, ஒரு நாடாக இந்த முறை முழுமையாகத் தயாராக உள்ளது. ஆப்ரேஷன் சிந்துர் 1.0இன் போது காட்டிய கட்டுப்பாட்டை அடுத்த முறை காட்ட மாட்டோம்.. அடுத்த முறை நாம் ஒரு படி மேலே செல்வோம்.. பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்று யோசிக்க வைக்கும் விதத்தில் செயல்படுவோம்" என்று நேரடியாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+