"இந்தியாவை நாங்க தாக்கவே இல்லை.." பயத்தில் பாகிஸ்தான் மறுப்பு! கண்முன்பாக பார்த்தபிறகும் கள்ளத்தனம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: காஷ்மீர் மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளில் பாகிஸ்தான் திடீரென அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் பிளாக் அவுட் அமல்படுத்தப்பட்டது. எல்லையில் பெரும் பதற்றமும் ஏற்பட்டது. ஆனால், தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்றும் பதான்கோட், ஜெய்சால்மர் குறிவைக்கவே இல்லை என்றும் பொய்யான ஒரு அறிக்கையை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த அறிக்கையை ஏற்கனவே நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகிறார்கள். இது குறித்து நாம் பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.. பல முக்கியமான தீவிரவாத உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டது. இது இந்திய ராணுவத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்பட்டது.

Pakistan Denies Attacks on Indian sites including Pathankot Despite many Evidence

பாகிஸ்தான் தாக்குதல்

இதைக் கண்டு பொறுத்துக் கொள்ளாத பாகிஸ்தான் ராணுவம் வியாழன் இரவு இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளில் தாக்குதலை நடத்தின. எல்லையோரப் பகுதிகளைக் குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தின. ஆனால், இந்தியப் பாதுகாப்புப் படை அதை வெற்றிகரமாக முறியடித்தது. இந்தியாவுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை ராணுவம் தெரிவித்துள்ளது.

மறுப்பு

அதேநேரம் மறுபுறம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. லாகூர், கராச்சி மீது இந்தியப் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயந்து போன பாகிஸ்தான் இந்தியப் பகுதிகளில் தாக்குதல் எதையும் நாங்கள் நடத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. பதான்கோட், ஜெய்சால்மர் மற்றும் ஸ்ரீநகர் மீது தாக்குதல் எதையும் நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

பயத்தில் அறிக்கை

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தக் கருத்துகள் (பாகிஸ்தான் தாக்குதல் பற்றியது) முற்றிலும் ஆதாரமற்றவை.. இவை பொய்யான தகவல்கள். எந்தவொரு தீவிர விசாரணையும் இல்லாமல் பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் அமைதியைச் சீர்குலைக்க இதுபோல செய்கிறார்கள்.

இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய அமைதியை ஆபத்திற்கு உள்ளாக்குவது மட்டுமல்லாமல் குழப்பத்தையும் உருவாக்குகிறது. பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான தேவையான நடவடிக்கை எடுப்போம்" என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆதாரங்கள்

வியாழக்கிழமை இரவு எல்லைப் பகுதியில் பல்வேறு இடங்களிலும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றது. அங்கு இதனால் முழுமையாக பிளாக் அவுட் செய்யப்பட்டது. சைரன்கள் எல்லாம் அலறிய நிலையில், மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கிச் சென்றனர். இருப்பினும், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வலிமையாக இருந்ததால் பாகிஸ்தானால் எந்தவொரு தாக்குதலையும் வெற்றிகரமாக முடியவில்லை. இந்திய வான்வெளி பாதுகாப்பு அமைப்பு எப்படி பாகிஸ்தான் ட்ரோன்களை வீழ்த்தின என்ற வீடியோ இணையத்திலும் வெளியாகியுள்ளன.

மறுபுறம் இந்தத் தாக்குதலால் பல பகுதிகளில் பிளாக் அவுட் அமல்படுத்தப்பட்டது. இது தொடர்பான பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. இந்திய ராணுவமும் பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்ததாக கூறியிருக்கிறது. இவ்வளவு ஆதாரம் இருந்தும் கூட கள்ளத்தனமாக பாகிஸ்தான் பொய் சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை நெட்டிசன்கள் மிகக் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+