பாகிஸ்தான் தேர்தல் ரிசல்ட்: அரியணை யாருக்கு? முந்தும் இம்ரான் கானின் கட்சி.. இழுபறியால் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பதற்றங்களுக்கு இடையே தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்கள். இருப்பினும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், தொடர்ச்சியாக நீடித்து இருக்கும் பொருளாதார நெருக்கடி என பாகிஸ்தான் கடும் பாதிப்புகளை சந்தித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக, அதன் பிரதமர் இம்ரான் கான் மீது எழுப்பப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி என அரசியல் பேரிடரிலும் பாகிஸ்தான் சிக்கியிருந்தது. இதிலிருந்து நாடு மீள நாடாளுமன்ற பொதுத்தேர்தலை நடத்துவதுதான் ஒரே வழி என தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Pakistan Election Results 2024: There is a drag on government formation as no party gets a single majority

நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கு முந்தைய நாள் பாலுசிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது. இதில் சுமார் 25 பேர் பலியான நிலையில், தேர்தல் அமைதியாக நடக்குமா என்று கேள்வி எழுந்தது. எனவே தேர்தலுக்காக நாடு முழுவதும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. பின்னர் திட்டமிட்டபடி நேற்று முன்தினம் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. அந்நாட்டின் சட்ட திட்டத்தை பொறுத்த அளவில், தேர்தல் நடைபெற்று 14 நாட்களுக்குள் வாக்கு எண்ணிக்கையின் முடிவு அறிவிக்கப்பட வேண்டும். எனவே வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி (பிடிஐ), முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.

பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் வேட்பாளர்கள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கின்றனர்.

இருப்பினும் யார் வெற்றி பெற்றார்கள் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 97 இடங்களில் முன்னிலையில் உள்ளனர். மறுபுறம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) 72 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 52 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.

இது குறித்து இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற உதவிய அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். மறுபுறம் மூன்று முறை பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், தனது கட்சி 'தனி-பெரிய' கட்சியாக உருவெடுத்துள்ளதாகவும், அண்டை நாடுகளுடன் அமைதியான உறவை வளர்த்து, நாட்டை செழிப்பிற்கு கொண்டு செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார். தற்போதைய நிலையில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பாகிஸ்தானில் ஆட்சி அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+