ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது பாக்.
Recommended Video
ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி எழுப்பினார். காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக ஷா மெகமூத் குரேஷி புகார் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் இன்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி பேசியதாவது:

ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மை முஸ்லிம்களை வலுக்கட்டாயமான நடவடிக்கைகளால் சிறுபான்மையினராக்குகிறது இந்தியா. காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக பிபிசி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரானது ருவாண்டாவைப் போல மாற்றப்பட்டு வருகிறது. காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை பயங்கரவாதத்தின் பெயரால் சர்வதேச நாடுகளை திசைதிருப்புகிறது இந்தியா. காஷ்மீர் நிலவரத்தை பன்னாட்டு அமைப்புகள் பார்வையிடுவதற்கு இந்தியா ஒப்புக் கொண்டால் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்வதேச அமைப்புகள் ஆய்வு நடத்த நாங்களும் ஒப்புக் கொள்கிறோம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலமே சிறைகூடமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு ஷா மெகமூத் குரேஷி பேசினார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பான 115 அறிக்கையை குரேஷி தாக்கல் செய்தார். அதில் காஷ்மீர் குறித்து ராகுல் காந்தி மற்றும் உமர் அப்துல்லா முன்வைத்த விமர்சனங்கள் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications