ஹையோ, ஹையோ.. இவரு பாகிஸ்தான் மாஜி முதல்வரா, இல்ல வடிவேலுவா.. இப்படி பிரஸ் மீட் பண்றாரு? வைரல் வீடியோ
Recommended Video

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரு முன்னாள் முதல்வர், பத்திரிகையாளர்களை டீல் செய்வதில், நம்மூர் கமல்ஹாசனுக்கெல்லாம் அண்ணன்.
மீண்டும் ஒருமுறை இப்படியான ஒரு பத்திரிகையாளர் பேட்டி அவரது பெயரை உலகம் எங்கும் வைரலாக்கியுள்ளது. அவர் பெயர் நவாப் அஸ்லம் ரைசானி.
பலோசிஸ்தான் மாகாணத்தின் முதல்வராக பதவி வகித்தவர் என்பது இதில் கூடுதல் சிறப்பு. நவாப் அஸ்லம் ரைசானி சமீபத்தில் அளித்த பத்திரிகையாளர் பேட்டி (!) ஒன்று, உலகமெங்கும் வைரலாகியுள்ளது.
[இறந்தவரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.450 கோடி.. தீவிரவாத காரணமா?.. மர்மம்!]
|
அடுத்த கேள்வி, அடுத்த கேள்வி
பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியை எழுப்ப, பதிலளித்த நவாப் அஸ்லம் ரைசானி, வேறு ஏதேனும் கேள்விகள் உள்ளனவா என்கிறார். அதைக் கேட்ட பத்திரிகையாளர்களும் வரிசையாக கேள்வி எழுப்புகிறார்கள். வேறு கேள்வி உண்டா, வேறு கேள்வி உண்டா என்று திரும்ப திரும்ப கேட்கிறார் நவாப் அஸ்லம் ரைசானி.

ஒரே வார்த்தைதான், மொத்தமாக காலி
அத்தனை பத்திரிகையாளர்களும் கேள்விகளை எழுப்பிய பிறகு, "நோ கமெண்ட்ஸ்" என்று ஒற்றை வார்த்தையில் தெரிவித்துவிட்டு இடத்தை காலி செய்துவிடுகிறார். இதை கேட்ட பத்திரிகையாளர்கள் தலையில் அடித்துக்கொண்டு சிரிக்கிறார்கள்.

சான்றிதழ்தானாம்
இந்த வீடியோதான் இப்போது வைரலாகியுள்ளது. நவாப் அஸ்லம் ரைசானி இதுபோல சர்ச்சையில் சிக்குவது முதல் முறை கிடையாது. ஏற்கனவே ஒருமுறை, போலி கல்வி சான்றிதழ் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது. ஒரிஜினலோ, போலியோ, கல்விச்சான்றிதழ், சான்றிதழ்தானே, அதில் என்ன பிரச்சினை என்று எக்குத்தப்பாக பதிலளித்து கிண்டலுக்கு உள்ளானவர்தான் இந்த நவாப் அஸ்லம் ரைசானி.

வடிவேலு பாகிஸ்தான் வெர்ஷன்
வடிவேலு ஒரு திரைப்படத்தில், என்ன கையப்பிடிச்சி இழுத்தியா.. என்று திரும்ப திரும்ப கேட்பார். கடைசியில், பஞ்சாயத்தில் இருக்கும் அத்தனை பேரையும் குழப்பிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். நவாப் அஸ்லம் ரைசானி செயலும், வடிவேலு மாதிரிதான் உள்ளது. சும்மாவா சொல்கிறார்கள் நெட்டிசன்கள், #Vadiveluforlife என்று. இப்படியான ஆட்களை நமது கண்முன்னே கொண்டு வந்த தீர்க்க தரிசியாயிற்றே வடிவேலு!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications