இறந்தவரின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.450 கோடி.. தீவிரவாத காரணமா?.. மர்மம்!
பாகிஸ்தானில் இறந்தவர் ஒருவரின் வங்கி கணக்கில் 450 கோடி ரூபாய் பணம் போடப்பட்டுள்ளது.
Recommended Video

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இறந்தவர் ஒருவரின் வங்கி கணக்கில் 450 கோடி ரூபாய் பணம் போடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தற்போது புதிய பிரச்சனை உருவாகி உள்ளது. அங்கு இருப்பவர்களின் வங்கி கணக்குகளில் திடீர் திடீர் என்று அதிக அளவில் பணம் போடப்படுகிறது.
சாதாரண மக்களின் வங்கி கணக்கில், கோடி கணக்கில் பணம் மர்மமாக போடப்படுகிறது. அந்நாட்டு உளவுத்துறை இதுகுறித்து விசாரித்து வருகிறது.

யார்
அந்த வகையில் இஃபால் ஆராய்ன் கடந்த 2014 மே மாதம் 9ம் தேதி மரணம் அடைந்தார். கராச்சியை சேர்ந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இந்த நிலையில் நேற்று இவரது வங்கி கணக்கில் 450 கோடி ரூபாய் பணம் போடப்பட்டு இருக்கிறது.

யாருக்கும் தெரியவில்லை
இவ்வளவு பணத்தை இவருக்கு போட்டது யாரென்று தெரியவில்லை. அவரது உறவினர்கள் யாரும் இவ்வளவு பணம் அளிக்கவில்லை என்றும் உறுதியாகி உள்ளது. மேலும் அவர்கள் சொந்தங்களில் எல்லோருமே ஏழைகள்தான், இவ்வளவு பணம் அவர்களிடம் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இறந்த ஒருவருக்கு ஏன் 4 வருடம் கழித்து பணம் போடப்பட வேண்டும் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கு முன் என்ன நடந்தது
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்லாமாபாத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனருக்கு 300 கோடி ரூபாய் பணம் போடப்பட்டது. அதேபோல் மாணவர் ஒருவருக்கு 250 கோடி ரூபாய் பணம் போடப்பட்டது. இவர்கள் இருவருக்குமே இவர்களுக்கு தெரியாமல்தான் பணம் போடப்பட்டுள்ளது. இவர்கள் அப்பாவிகள் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

தீவிரவாத குழப்பம்
இது அந்நாட்டு உளவுத்துறைக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தீவிரவாதிகளின் வேலையாக இருக்குமோ என்று அவர்கள் விசாரித்து வருகிறார்கள். ஆனால் இவ்வளவு கோடி பணத்தை வேண்டும் என்றே வெளியேவிட்டு மாட்டிக்கொள்வது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications