இளம்பெண்ணுடன் நெருக்கம்.. வங்கதேசத்தை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி.. ஹனி டிராப் காரணமா?
டாக்கா: வங்கதேசத்துக்கான பாகிஸ்தான் தூதரகத்தில் உயர் கமிஷனராக பணியாற்றி வரும் சையத் அஹமது மாரூப் திடீரென்று நாட்டை விட்டு வெளியேறி உள்ளார். இளம்பெண்ணுடன் அவர் சேர்ந்து இருக்கும் போட்டோ, வீடியோக்கள் வெளியான நிலையில் அவர் வெளியேறி உள்ளதால் ஹனிடிராப்பில் சிக்கினரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வங்கதேசத்துக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நல்ல உறவு மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதற்கு வங்கதேச இடைக்கால அரசு அமைந்தது தான் காரணம். இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நம் நாட்டை எதிர்த்து வருவதுடன், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது வங்கதேசத்துக்கான பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் உயர் கமிஷனராக சையத் அஹமது மாரூப் என்பவர் பணியாற்றி வருகிறார். இது தூதருக்கு அடுத்த பொறுப்பாகும். காமன்வெல்த் நாடுகளுக்கான பணிகளை மேற்கொள்வார். இந்நிலையில் தான் சையத் அஹமது மாரூப் குறித்து பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது திடீரென்று சையத் அஹமது மாரூப் வங்கதேசத்தை விட்டு வெளியேறி உள்ளார். அவர் ‛ஹனி டிராப்'பில் சிக்கியதாகவும், இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் வெளியாகி உள்ளதால் அவர் நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. ஹனி டிராப் என்பது குறிப்பிட்ட அந்த நபருடன் பெண் ஒருவரை பழக வைத்து, நெருக்கமாக இருக்க வைத்து போட்டோ, வீடியோ எடுத்து கொண்டு அவரை மிரட்டி தேவையானவற்றை செய்து கொள்ள பயன்படுத்தும் யுக்தியாகும்.
இந்நிலையில் தான் சமீபத்தில் சையத் அஹமது மாரூப், பெண் ஒருவருடன் நெருக்கமாக சேர்ந்து இருக்கும் போட்டோ வெளியானது. இது விவாதத்தை கிளப்பிய நிலையில் தற்போது அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி உள்ளார். இதுபற்றி வங்கதேசத்துக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கூறுகையில், ‛‛சையத் அஹமது மாரூப் விடுமுறையில் சென்றுள்ளார். விரைவில் அவர் திரும்பி வருவார்'' என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக வங்கதேச வெளியுறவுத்துறை தரப்பில், ‛‛சையது அஹமது மாரூப் பாகிஸ்தான் புறப்பட்ட அதேநாளில் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எவ்வளவு நாளில் திரும்ப வருவார். விடுமுறைக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வங்கதேசத்தின் Prothom Alo செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ‛‛சையது அஹமது மாரூப் கடந்த மே 11ம் தேதி நாட்டை தலைநகர் டாக்காவை விட்டு சென்றார். அவர் துபாய் வழியாக பாகிஸ்தானுக்கு செ்னறுள்ளார். இவர் திடீரென்று பாகிஸ்தான் செல்ல ஹனி டிராப் பிரச்சனை தான் காரணம். ஆனால் அதிகாரிகள் தரப்போ அவர் விடுமுறையில் சென்றுள்ளதாக தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. தற்போது வங்கதேசத்துக்கான தற்காலிக தூதரக கமிஷனராக துணை கமிஷனர் முகமது ஆசீப் செயல்பட்டு வருகிறார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications