Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛4 நொடி தான் டைம்'.. ஐநாவில் பாகிஸ்தான் மூக்கை அறுத்த பிரபலம்.. இஸ்ரேலை கண்டித்ததால் வந்த வினை!

Subscribe to Oneindia Tamil

ஜெனீவா: கத்தார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் விவகாரம் தொடர்பாக ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் கத்தாருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேலை கண்டித்தது. அப்போது ஐநா வாட்ச் அமைப்பின் இயக்குநரும் வழக்கறிஞருமான ஹில்லல் நியூயர் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாக பேசினார். கத்தாரை விமர்சனம் செய்தார். இந்த சமயத்தில் தேவையின்றி பாகிஸ்தான் பிரதிநிதி உள்ளே வந்து அவரது பேச்சை கண்டித்தார். இதையடுத்து ஹில்லலுக்கு வெறும் 4 நொடி தான் பேச வாய்ப்பு என்று கவுன்சில் தலைவர் கூறிய நிலையில் அவர் ஒற்றை வார்த்தை சொல்லி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. ஹமாஸ் அமைப்பின் பிடிவாதத்தால் காசாவில் உள்ள மக்களை முழுவதுமாக வெளியேற்றும் வரை போர் நடக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

pakistan-is-a-state-sponsor-of-terror-says-hillel-neuer-who-is-human-rights-lawyer-in-un

அதோடு காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போரை நிறுத்தும் வகையில் அமெரிக்கா, கத்தார் ஆகியவை மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இஸ்ரேல் சார்பில் அமெரிக்காவும், ஹமாஸ் சார்பில் கத்தாரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கத்தார் மீது இஸ்ரேல் ‛அட்டாக்’

இது ஒருபுறம் இருக்க கடந்த 9 ம் தேதி திடீரென்று இஸ்ரேல், கத்தார் மீது தாக்குதல் நடத்தியது. கத்தார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. தோஹாவில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த கலில் அல் ஹயா என்பவர் தனது ஆதரவாளர்களுடன் தங்கியிருக்கிறார். அவரை தீர்த்து கட்டும் முடிவில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியது.

இதில் கலில் அல் ஹயா தப்பிய நிலையில் அவரது மகன், அவரது இயக்குநர், பாதுகாவலர்கள், கத்தார் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் என்ற 6 பேர் இறந்தனர் இந்த தாக்குதலுக்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் கோழைத்தனமானது. சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறையை மீறும் வகையில் உள்ளதாக கத்தார் தெரிவித்தது. இந்த தாக்குதல் உள்ளது என கத்தார் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐநா மனித உரிமை கவுன்சில்

ஆனால் இஸ்ரேல், ‛‛ஹமாஸ் பயங்கரவாதிகளை அழிப்பதற்காக தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் பதுங்கிய ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தீர்த்து கட்டியது போல் நாங்களும் இந்த தாக்குதலை நடத்தினோம்'' என நியாயப்படுத்தியது. இருப்பினும் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலை துருக்கி, ஈரான், வெனிசுலா, பாகிஸ்தான், உள்பட பல நாடுகள் இஸ்ரேலை கண்டித்தன.

இதற்கிடையே தான் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து ஐநா சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கூடியது. கத்தார், துருக்கி, பாகிஸ்தான், வெனிசுலா உள்பல பல நாடுகளின் பிரதிநிதிகள் இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்தனர்.

ஹில்லல் நியூயர் ‛என்ட்ரி’

இந்த சமயத்தில் ஐநா வாட்ச் (UN Watch) அமைப்பின் தலைவரும், மனித உரிமைகள் சார்ந்த சர்வதேச வழக்கறிஞருமான ஹில்லல் நியூயருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் இஸ்ரேல் தாக்குதலை நியாயப்படுத்தி பேசினார். அதோடு கத்தாரை கடுமையாக விமர்சனம் செய்ததோடு, பாகிஸ்தானின் மூக்கையும் அறுத்தார்.

இதுதொடர்பாக ஹில்லல் நியூயர் பேசும்போது, ‛‛பலரும் சர்வதேச சட்டங்களை மீறுவதை நாம் பார்த்து இருக்கிறோம். சர்வதேச சட்டங்களை மீறுவோர் தொடர்ந்து அதனை செய்து வருகின்றனர். இப்போது குற்றவாளிகளை அடையாளம் காண்பது பெரும் சவாலாக இருக்கிறது. இந்த சமயத்தில் நான் கத்தாரிடம் கேள்வி கேட்கிறேன்.

கத்தார் மீது ‛அட்டாக்’

கத்தார் தலைநகரில் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த கூடாது என்று நீங்கள் சொன்னால்.. உங்களின் தலைநகரில் ஏன் பயங்கரவாதிகளை தங்க அனுமதிக்கிறீர்கள்? பயங்கரவாதிகள் இன்னும் மக்களை பணையக்கைதிகளை தங்கள் பிடியில் வைத்துள்ளனர். அவர்களை துன்புறுத்துகின்றனர். அமைதி பேச்சுவார்த்தைக்கு இடையூறு செய்கின்றனர்.

இப்படி இருக்கும்போல் ஹனியே (இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் மாஜி தலைவர் இஸ்மாயில் ஹனியே), மசால், அல் ஹயா உள்ளிட்டவர்களுக்க நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கின்றனர். 2007 ம் ஆண்டில் காசாவில் ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் ஏன் இருந்தீர்கள்? இஸ்ரேலுக்கு எதிரான 5 போர்களுக்கு ஏன் எரிபொருள் ஊற்றினீர்கள்?.

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம்

அக்டோபர் 7 ம் தேதி (இஸ்ரேலில் நுழைந்து மக்களை ஹமாஸ் பணையக்கைதிகளாக பிடித்த தினம்) நடந்த சம்பவத்துக்கு இஸ்ரேலை ஏன் குற்றம்சாட்டுகிறீர்கள். 1,200 இஸ்ரேலியர்கள், அமெரிக்கர்களை ஹமாஸ் கொன்றதே. மேலும் கத்தாரின் அல் ஜசீரா ஏன் ஹமாசின் இடைவிடாத பிரசார குழுவாக செயல்படுகிறதே?.

பகலில் போரை நிறுத்தும் மத்தியஸ்தராக இருக்கும் நீங்கள், இரவில் பயங்கரவாதிகள் ஆதரவாளர்களாக மாறிவிடுகிறீர்கள். இது ஏன்?. கத்தார் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடாக உள்ளது. இதனை Gulf States 2017 ல் கூறியது. கத்தார் உடனான உறவை துண்டித்தது. ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் ஆகியோர் இஸ்ரேலை கண்டித்தனர்.

குறுக்கிட்ட பாகிஸ்தான்

அல் குவைதா தலைவன் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் புகுந்து அமெரிக்கா கொன்றது. அப்போது, நீதி நிலைநாட்டப்பட்டது. சர்வதேச பயங்ரவாதி கொல்லப்பட்டு விட்டார் என்று ஐநா தலைவர் சொன்னார். பிரான்ஸ் சார்பில் அனைத்து ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி என்று தெரிவிக்கப்பட்டது.

இப்போது அதை தானே இஸ்ரேலும் செய்திருக்கிறது. இப்போது ஏன் மாற்றி பேசுகிறீர்கள்'' என்று கேள்வி எழுப்பினார். இதற்கிடையே பாகிஸ்தான் பிரதிநிதி குறுக்கிட்டார். ஹில்லல் பேச்சுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதிநிதி பேசும்போது, ‛‛ ஐநா சாசனம், இறையாண்மை கொண்ட உறுப்பு நாட்டின் ஒருமைப்பாட்டை எந்த பிரதிநிதியும் மீறக்கூடாது. இதை ஐநா மனித உரிமை கவுன்சில் தலைவர் உறுதி செய்ய வேண்டும். எங்கள் மீதான ஆதாரமற்ற குற்றச்சாட்டை நிராகரிக்கிறோம்'' என்றார்.

4 நொடியில் மூக்கை உடைத்த ஹில்லல்

அதை பதிவு செய்த கவுன்சில் தலைவர் மீண்டும் ஹில்லலுக்கு பேச வாய்ப்பு கொடுத்தார். அப்போது ஒரு மெசேஜையும் கூறினார். '‛உங்களுக்கு இன்னும் 4 நொடிகள் தான் பேச நேரம் இருக்கிறது'' என்றார். 4 நொடியா? இந்த நேரத்தில் ஒருவரால் என்ன பேச முடியும் என்று அனைவரும் யோசிக்க ஹில்லல் மட்டும் மனம் தளரவில்லை. அவரது அட்டாக் கத்தாரில் இருந்து பாகிஸ்தான் பக்கம் திரும்பியது.

ஆம், கத்தாரை தாக்கி பேசி வந்த ஹில்லல் தனது பேச்சின் போது குறுக்கிட்ட பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். கவுன்சில் தலைவர் கொடுத்த 4 நொடியில் ‛பயங்கரவாதிகளை ஆதரிக்கும் இன்னொரு நாடு பாகிஸ்தான்' என்று கூறி பாகிஸ்தான் தலையில் இடியை இறக்கினார். இந்த பேச்சு தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+