For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒபாமாவின் இந்திய வருகையால் பாகிஸ்தானுக்கு வயிற்றெரிச்சல்! 'ரேப் பப்ளிக்டே' என்று கிண்டல்!!

By Veera Kumar
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முன்னிலையில், இந்தியா மிக பிரமாண்டமாக குடியரசு தின கொண்டாட்டங்களை நடத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் நாட்டினரின் வயிறு பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்துள்ளது. அண்டை நாடான இந்தியாவுக்கு வந்த அமெரிக்க அதிபர் , பாகிஸ்தானுக்கு வர முடியாது, அங்கு நிலைமை சரியில்லை என்று வெளிப்படையாக அறிவித்தது அந்த நாட்டினருக்கு ஆற்றாமையை கொடுத்துள்ளது.

பலாத்காரங்களை கையிலெடுத்த பாக்.

பலாத்காரங்களை கையிலெடுத்த பாக்.

ஒபாமா இந்தியாவுக்கு வந்துள்ளதையும், பாகிஸ்தானை மதிக்காததையும் மறைப்பதற்காக பாகிஸ்தான் மக்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம், இந்தியாவில் நடைபெறும், பலாத்கார குற்றங்களாகும். டிவிட்டரில் இதற்காக, #RapePublicDay என்ற பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கி, இந்தியா, இந்தியர்கள் மீது சேற்றைவாரி வீசிவருகின்றனர் பாகிஸ்தானியர்கள்.

குடியரசு தினத்தை கொச்சைப்படுத்தும் பாக்.

குடியரசு தினத்தை கொச்சைப்படுத்தும் பாக்.

ரிபப்ளிக்டே என்பதைத்தான் ரேப்பப்ளிக்டே என்று பெயர் மாற்றம் செய்து தங்களது வயிற்றெரிச்சலுக்கு பர்னாலாக தடவுகின்னர் பாகிஸ்தானியர்கள்.

போராட்டமே நடக்கவில்லையாமே.. அப்படியா!

போராட்டமே நடக்கவில்லையாமே.. அப்படியா!

பாத்திமா அலி என்ற பாகி்ஸ்தான் பெண், தனது டிவிட்டில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பெண்கள் கற்பழிப்புக்கு உள்ளாகலாம், ஆனால் போராட்டம் நடத்த முடியாது என்று கூறியுள்ளதுடன், கார்ட்டூன் ஒன்றையும் தனது டிவிட்டில் வெளியிட்டுள்ளார். பாவம்... டெல்லி கற்பழிப்புக்காக இந்திய சகோதர, சகோதரிகள் நடத்திய, போராட்டம் நாட்டையே உலுக்கியது தெரியாத பேதை பெண் போலும்.

அடடே.. கண்டுபிடிச்சிட்டாங்க

அடடே.. கண்டுபிடிச்சிட்டாங்க

அரோசா முகல் என்பவர், இந்தியர்கள் பெண்களை தெய்வங்களாக வணங்குவதாகவும், ஆனால் ரோட்டில் மட்டும், பெண்களை பலாத்காரம் செய்வதாகவும் குறிப்பிட்டு கேலி சித்திரமும் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அடிமையாம்.. யாரு சொல்றது பாருங்க..

அமெரிக்காவின் அடிமையாம்.. யாரு சொல்றது பாருங்க..

பீனிஷ் மாலிக் என்ற பாகிஸ்தான் பெண்ணின் வயிற்றெரிச்சல் அவரது டிவிட்டில் அப்பட்டமாக தெரிகிறது. அதாவது அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்காமல், உங்கள் நாட்டு பெண்களின் கற்பை காப்பாற்றுங்கள் என்று அந்த அம்மணி, டிவிட் செய்துள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், இதே பெண்தான், தனது மற்றொரு டிவிட்டில் பாகிஸ்தான்-சீனா நட்புறவை இரு சிங்கங்களுக்கு ஒப்பாகவும், இந்தியாவை, ஓநாய் போலவும் சித்தரித்துள்ளார். சீனாவிடம் வைத்தால் நட்பு, அமெரிக்காவிடம் வைத்தால் அடிமைத்தனமா?

கலாய்க்கும் இந்தியர்கள்

கலாய்க்கும் இந்தியர்கள்

அதெல்லாம் ஓ.கே. அண்டை நாட்டு மக்களே.. 120 கோடி மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால், பலாத்கார சம்பவங்கள் இந்தியாவில் மிகவும் குறைவு என்பது தெரிந்திருந்தும் இதுபோல டிவிட் செய்கிறீர்களே.. "பலாத்காரம் செய்ய ஆண் மகன்கள் தேவை, தோத்தாங்கொள்ளியான உங்கள் நாட்டில் அதற்கு வாய்ப்பில்லை" என்று இந்தியர்கள் சிலர் உங்கள் ஹேஷ்டேக்கில், புகுந்து கலாய்த்துள்ளனரே அதை பார்த்தீர்களா!

ஆனாலும், இந்தியர்களே, பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு, நம்மை பார்த்து கேவலமாக பேசும் அளவுக்கு நீங்களும் நடந்து கொள்ளாதீர்கள். செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா...

English summary
The world largest Democracy, India, is celebrating ‘Republican Day’ on Monday while the people living in India and outside India are recording protest against government with slogans of ‘Rape Public Day’ as government has failed to control crime against women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X