ஜோக்கர் பாகிஸ்தான் எங்களுடன் மோதுவதா? சீனா போட்டோவை எவனாவது பரிசா கொடுப்பானா? விளாசிய ஓவைசி
குவைத்: ‛இந்தியாவை இப்படித்தான் தாக்கினோம்', என்று சீன ராணுவத்தினர் பயிற்சி செய்த போட்டோவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு அந்த நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீர் வழங்கினார். இதனால் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசீம் முனீர் ஆகியோர் ட்ரோல் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த ஜோக்கர் பாகிஸ்தான் தான் எங்களுடன் போட்டியிட விரும்புகிறார்களாம் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து நம் நாடு பாகிஸ்தானை பதற வைத்தது. கடந்த 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஏவுகணைகளை ஏவி பாகிஸ்தான் மீது நம் படை வீரர்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

9 பயங்கரவாத முகாம்கள், முக்கிய விமான தளங்கள் அழிக்கப்பட்டன. நம் ராணுவத்தின் பதிலடியை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதை தொடர்ந்து தான் போர் நிறுத்தம் வந்தது.
இப்படி நம் படை வீரர்களின் வீரத்துக்கு முன் மண்டியிட்ட இந்த பாகிஸ்தான் தற்போது போர் தொடர்பாக பொய்களை கூறி வருகிறது. இந்தியாவை தாக்கி வெற்றி பெற்றுவிட்டோம் என்று தம்பட்டம் அடித்து வருகிறது. மொத்த உலகமும் பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்ததை அறிந்த நிலையி்ல் பாகிஸ்தான் மட்டும் பொய்களை நிறுத்தவே இல்லை.
இதற்கிடையே தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் சீன ராணுவத்தினர் PHL-03 ராக்கெட் லாஞ்சர் வைத்து பயிற்சி மேற்கொண்ட படத்தை பிரதமர் ஷெபாஷ் ஷெரீப்புக்கு கிப்ட்டாக வழங்கினார். அதுமட்டுமின்றி இந்தியாவுக்கு எதிராக நம் வீரர்கள் இப்படி தான் தீவிரமாக சண்டை செய்தார்கள் என்று கூறி அவரை முட்டாளாக்கினார். இது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தானின் பொய்களை முறியடிக்க நம் நாட்டின் எம்பிக்கள் குழு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளன. ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி உறுப்பினராக இருக்கும் குழு குவைத் சென்றுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி அந்த நாட்டின் பிரதிநிதிகளிடம் அவர்கள் எடுத்துரைத்தனர்.
அதோடு பாகிஸ்தான் பிரதமரையும் ராணுவ தளபதியையும் ஜோக்கர்கள் என்று அட்டாக் செய்தார். இதுதொடர்பாக ஓவைசி கூறுகையில், ‛‛பாகிஸ்தான் ராணுவ தளபதி முனீர், அந்நாட்டின் பிரதமருக்கு ஒரு போட்டோவை பரிசாக வழங்கினார். அது 2019ல் சீனா பயிற்சி செய்யும்போது எடுத்த போட்டோ. இது இணையதளங்களில் உள்ளது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான போரில் வென்று விட்டோம் என்று அந்த போட்டோவை கொடுத்து இருக்கிறார்.
இப்படி தான் உலகத்தை ஏமாற்றுகிறார்கள். பாகிஸ்தான் சொல்லும் எந்த விஷயத்தையும் மக்கள் கொஞ்சம் அளவு கூட நம்பக்கூடாது. ஒரிஜினல் போட்டோவை நகல் எடுக்க வேண்டும் என்றால் கூட கொஞ்சம் அறிவு வேண்டும். அந்த அறிவு கூட அவர்களுக்கு இல்லை. இப்படி முட்டாள் ஜோக்கர்களாக இருந்து கொண்டு இந்தியாவுடன் போட்டி போட விரும்புகிறார்களாம்.
'' என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications