பாக். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.. 90 நாட்களில் தேர்தல்.. இடைக்கால பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார்
இஸ்லாமாபாத்; பிரதமர் இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆரிப் அலிவ் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் காபந்து பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார். அடுத்த 3 மாதங்களில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி ஆரிப் அலிக்கு பரிந்துரை செய்திருந்தார். பாகிஸ்தானில் புதிதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தவும் இம்ரான் கான் பரிந்துரை செய்திருந்தார்.
அங்கு நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இம்ரான் இந்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், அந்த தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்து இருக்கிறார்.

தீர்மானம்
இந்த தீர்மானம் சட்டத்திற்கு எதிரானது. பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்ட விதி 5க்கு எதிரானது இது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி அதை துணை சபாநாயகர் குவாஸிம் கான் சுரி நிராகரித்து இருக்கிறார். இதனால் அந்த தீர்மானம் மீது இப்போது வாக்கெடுப்பு நடத்தப்படாது. இதனால் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் தொடர்ந்து நீடிப்பார்.

நாடாளுமன்ற அவை
பாகிஸ்தான் நாடாளுமன்ற அவை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. எனவே அங்கு புதிதாக தீர்மானம் தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால் அதற்கு முன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி ஆரிப் அலிக்கு பரிந்துரை செய்துள்ளார். அதோடு புதிதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த இம்ரான் கான் பரிந்துரை செய்துள்ளார். பாகிஸ்தான் மக்களே புதிய அரசை தேர்வு செய்ய வேண்டும்.

மக்கள் முடிவு
தங்களை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை அவர்களே தீர்மானம் செய்ய வேண்டும். இதனால் தேர்தலை புதிதாக நடத்துங்கள். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று துணை சபாநாயகர் எடுத்த முடிவை வரவேற்கிறேன். அவரின் முடிவிற்கு என்னுடைய ஆதரவை தருகிறேன். தங்களை யார் ஆள வேண்டும் என்பது மக்களின் முடிவுதான். என்னுடைய ஆட்சியை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது.

ஏற்பு
பாகிஸ்தானை கட்டுப்படுத்த வெளிநாட்டு சக்திகள் முயன்றதை நாங்கள் முறியடித்து இருக்கிறோம் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து உள்ளன. பிரதமர் இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆரிப் அலிவ் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் காபந்து பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார். அடுத்த 3 மாதங்களில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும்
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications