அணுசக்தி அமைப்பை மீட்டிங்கிற்கு அழைத்தாரா பாகிஸ்தான் பிரதமர்? அணுகுண்டை கையில் எடுக்கிறதா?

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அந்நாட்டின் அணுசக்தி கட்டளை அமைப்பை கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம் உள்ளதால் ஷேபாஸ் ஷெரீப் அவசர அழைப்பு விடுத்ததாக செய்திகள் வருகின்றன.

இதனால் பாகிஸ்தான் அணு ஆயுதத்தை கையில் எடுக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியப் படைகள் பாகிஸ்தானின் எல்லைக்குள் உள்ள ராணுவ பகுதிகளை ஏவுகணை மூலம் தாக்கிவிட்டது. லாகூர் போன்ற பாகிஸ்தானின் முக்கிய பகுதிகள் தாக்கப்பட்டுவிட்டது.

pakistan Jammu Kashmir

விமானப்படை தளங்கள் இந்திய ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. நூர் கான் தளம், முரித் தளம் மற்றும் ஷோர்கோட் தளம் ஆகியவை தாக்கப்பட்டது என்று பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

இந்திய ராணுவத்தால் தகர்க்கப்பட்ட விமானப்படை தளங்கள் பின்வருமாறு,

நூர் கான் விமான தளம், ராவல்பிண்டி
PAF ரஃபிகி விமான தளம், ஷோர்கோட்
⁠PAF முரிட் விமான தளம், சக்வால் தாக்கப்பட்டுவிட்டது .

அணு ஆயுத பவர்

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அந்நாட்டின் அணுசக்தி கட்டளை அமைப்பு கூட்டத்திற்கு அவசர அழைப்பு விடுத்துள்ளார்.

அணு ஆயுத போர்

அணுசக்தி திறன் அணு ஆயுதங்கள்:

இந்தியா: ~160
பாகிஸ்தான்: ~165

விநியோக அமைப்புகள்:

இந்தியா: நிலம், காற்று, கடல் சார்ந்தது
பாகிஸ்தான்: முதன்மையாக நிலம் மற்றும் வான் அடிப்படையிலானது இந்தியாவை விட பாகிஸ்தானிடம் கூடுதலாக 5 அணு ஆயுதங்கள் இருந்தாலும். இந்தியாவிடம் உள்ளது கூடுதல் பலம் வாய்ந்தது. அதோடு இந்தியாவில் உள்ள அணு ஆயுதங்கள் மூலம் அதிக தூரத்திற்கு தாக்க முடியும். அதோடு நிலம், காற்று, கடல் என்று 3 வழிகளில் தாக்குதல் நடத்த முடியும்.

அணு கோட்பாடு:

இந்தியா: தனியாக பயன்பாட்டுக் கொள்கை இல்லை
பாகிஸ்தான்: அறிவிக்கப்பட்ட கொள்கை இல்லை (தெளிவற்ற நிலைப்பாடு)

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒருவேளை போர் வெடித்தால், மனிதவளம், பாதுகாப்பு பட்ஜெட் மற்றும் நிலம், வான் மற்றும் கடல் படைகள், இராணுவ சொத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவின் கையே மேலோங்கி இருக்கும். ரஃபேல் போன்ற மேம்பட்ட போர் விமானங்கள், இரண்டு விமானம் தாங்கிகள், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், விரிவான ஏவுகணை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வலையமைப்பு உள்ளிட்ட பெரிய மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஆயுத பாதுகாப்பை இந்தியா கொண்டுள்ளது. அதிநவீன ராணுவ பொருட்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்துள்ள காரணத்தால் இந்தியாவின் பாதுகாப்புத் துறையும் மிகவும் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.

ஏற்கனவே அணு ஆயுத எச்சரிக்கை

முன்னதாக ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி விடுத்த எச்சரிக்கையில், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிதாக்கி வருகின்றன. இதில் தேவையின்றி பாகிஸ்தான் மீது பழி போடுகிறார்கள். அது தவறு. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்கு தேவையின்றி திட்டங்களை வகுக்கிறார்கள்.

லீக்கான ஆவணங்களின் படி பார்த்தால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்த போகிறது. இந்தியாவின் படைகள் பாகிஸ்தானில் சில செக்டார்களில் தாக்குதல் நடத்த திட்டங்களை வகுக்கின்றனர். இதற்கான ஆவணங்கள் கசிந்து உள்ளன. இந்தியா எங்களை தாக்க கூடாது. எங்களை தாக்க நினைத்தால் நாங்கள் திருப்பி தாக்குவோம்.

அது பலமுனை தாக்குதலாக இருக்கும். யாருக்கு பலம் அதிகம் உள்ளது என்பது பெரிய விஷயம் இல்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானைப் பொறுத்தவரை, எண்ணிக்கை பலம் குறித்த இந்த விவாதத்தில் நாங்கள் ஈடுபட விரும்பவில்லை. மரபுவழி மற்றும் அணுசக்தி ஆகிய இரண்டிலும் முழு அளவிலான சக்தியையும் நாங்கள் பயன்படுத்துவோம். அதற்கு தயாராகவே இருக்கிறோம், என்று ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி எச்சரித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+