சிந்து நதி நீர் ஒப்பந்தம்.. ஷாங்காய் மாநாட்டில் புலம்பி தள்ளிய ஷெரீப்.. கண்டுகொள்ளாத உலக தலைவர்கள்
பெய்ஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு உலக தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக மறைமுகமாகப் பேசினார். இந்தியாவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்றாலும் நீர் ஒப்பந்தங்கள் குறித்து அவர் மறைமுகமாகப் பேசினார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. பாகிஸ்தானின் பஞ்சாப் உட்படப் பல மாகாணங்கள் சிந்து நதி நீரை நம்பியே இருக்கிறது. அப்படியிருக்கும்போது திடீரென நதி நீர் தடைப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய சிக்கலையே தரும்.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்
இதன் காரணமாகவே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா மீண்டும் பின்பற்ற வேண்டும் என பாகிஸ்தான் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மிரட்டியும் பார்த்துவிட்டது கெஞ்சியும் பார்த்துவிட்டது.. ஆனாலும், இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றுவதாக இல்லை. பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராக வலிமையான நடவடிக்கை எடுக்கும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் மீண்டும் செயல்பாட்டிற்கு வராது என்பதை இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.
பாகிஸ்தான் பேச்சு
இதற்கிடையே நேற்று நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டிலும் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேசியிருந்தார். தியான்ஜினில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், நீர் பகிர்வு ஒப்பந்தங்கள் உட்பட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் எல்லா உறுப்பு நாடுகளும் மதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஷெரீப் சொன்னது என்ன
பாக். பிரதமர் ஷெரீப் தனது உரையில் மேலும், "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் எல்லா இருதரப்பு ஒப்பந்தங்களையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். உறுப்பு நாடுகளுக்கு இடையே தற்போதுள்ள ஒப்பந்தங்களின்படி தண்ணீருக்கான தடையற்ற அணுகல் வழங்கப்பட வேண்டும்" என்று கூறினார். அவர் தனது பேச்சில் நேரடியாக இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட அவர் இந்தியாவைத் தான் சொல்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது.
அதேநேரம் சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தான் தலைவர்கள் பேசுவது இது முதல்முறை இல்லை. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ, இந்தியா பாகிஸ்தானின் நீர் விநியோகத்தைத் துண்டித்தால் நதிகளில் ரத்தம் பாயும் என்று அடாவடியாகப் பேசியிருந்தார்.
பிரதமர் மோடி திட்டவட்டம்
இருப்பினும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்தும் திட்டம் எதுவும் இந்தியாவுக்கு இல்லை. பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். குறிப்பாகப் பிரதமர் மோடி, கடந்த ஜூலை மாதம் பேசுகையில், "சிந்து நதிநீர் ஒப்பந்தம் நேருவின் மிகப் பெரிய தவறு. இந்திய விவசாயிகளுக்கு இதில் இடமில்லை.. இந்தியாவுக்கு வெளிப்படையாக எதிரி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் ஒரு நாட்டிற்கு 80 சதவீதத் தண்ணீரை அவர்கள் கொடுத்துவிட்டார்கள். மேலும் அடுத்தடுத்த அரசுகளும் இந்த தவறை சரிசெய்யவில்லை" என்றார்.
1960இல் உலக வங்கியால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆகிய கிழக்கு நதிகளின் மீது இந்தியாவிற்கு உரிமைகள் வழங்கப்பட்டன. அதே நேரத்தில், சிந்து, ஜீலம் மற்றும் செனாப் உட்பட பெரிய பங்களிப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. இதைத் தான் வரலாற்றுத் தவறு என்றும் இதனால் இந்திய விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மேலும், ரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்பதைத் தனது அரசு தெளிவாகச் சொல்லிவிட்டதாகவும் அவர் கூறினார்.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்!












Click it and Unblock the Notifications