பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம்.. வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு.. பலர் படுகாயம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததில் ரயில் நிலையம் ஒரு நிமிடம் குலுங்கியது. இந்த தாக்குதலில் 21 பேர் பலியாகினர். 42 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ளது பலோசிஸ்தான் மாகாணம். இந்த மாகாணத்தின் தலைநகரன குவெட்டா அந்த நாட்டின் பரபரப்பான நகரங்களில் ஒன்றாகும். குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதும்.

இந்த நிலையில், இன்று காலை குவெட்டா ரயில் நிலையத்தில் இருந்து பெஷாவர் நகருக்கு ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட தயாராக இருந்தது. அப்போது ரயில் நிலையத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததில் ரயில் நிலையம் ஒரு நிமிடம் குலுங்கியது. இந்த தாக்குதலில் 21 பேர் பலியாகினர். 42 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ரயில் நிலையத்தின் புக்கிங் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடித்து இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. வெடி குண்டு வெடித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலோச் விடுதலை ராணுவம் (BLA) என்ற இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. குண்டு வெடிப்பு நடைபெற்ற பலோசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு இத்தகைய தாக்குதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
தற்போது ரயில் நிலையத்தில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதற்கு பலோசிஸ்தான் மாகாண முதல்வர் சர்ப்ரஸ் புக்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இந்த கொடூர தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள புக்தி, உடனடியாக உரிய விசாரணைக்க்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் இந்த தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications