விடுதலை செய்யப்பட்டார் தீவிரவாதி ஹபீஸ் சையது?.. இந்தியாவிற்கு எதிராக பாக். ஷாக் நடவடிக்கை?
Recommended Video
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஹபீஸ் சையது முகமது விடுதலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
லஸ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தை உருவாக்கியவரும், ஜமாத் உத்தவா மற்றும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புகளின் தலைவருமான ஹபீஸ் முகமது சையது, இந்தியாவில் பல தீவிரவாத தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்.
கந்தகார் விமான கடத்தல், மும்பை 26/11 மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சையது. அதிலும் புல்வாமா தாக்குதலுக்கு பின் ஹபீஸ் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

எப்படி பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ராணுவத்தின் கஸ்டடியில் இத்தனை நாட்கள் ஹபீஸ் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார். ஆனால் ஹபீஸுக்கு பாகிஸ்தான் ராணுவம் முழு சுதந்திரம் வழங்கி வந்தது. அவர் நிறைய தீவிரவாத திட்டங்களை அங்கு தீட்டி அதை செயல்படுத்தி வந்தார் என்றும் புகார் எழுந்தது.

விசாரிக்க முடிவு
இவரை இந்தியாவிற்கு கொண்டு வந்து விசாரிக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் ஹபீஸ் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் சீனா கூட, ஹபீஸ் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது.

விடுதலை செய்தனர்
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஹபீஸ் சையது முகமது விடுதலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் பதில் நடவடிக்கையாக அவரை விடுதலை செய்து இருப்பதாக கூறுகிறார்கள்.

ஏன் விடுதலை
இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் விடுதலை செய்ததாக தகவல்கள் வருகிறது.ஹபீஸ் சையது பாகிஸ்தானில் கோட் லாக்பாட் சிறையில் கஸ்டடியில் இருந்தார். இவரின் விடுதலை செய்தி உறுதியானால், இந்தியாவில் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல்கள் கூட நடக்க வாய்ப்புள்ளது. இதனால் தற்போது ராணுவமும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications