பாகிஸ்தானில் மாகாண அமைச்சரின் மகன் மாயம்- தீவிரவாதிகளால் கடத்தல்?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைச்சர் ஒருவரின் மகனை ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் சிலர் கடத்திச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலுசிஸ்தான் மாகாணம், தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மாகாணமாக கருதப்படுகிறது. அங்கு, தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் மோதல் நீடித்து வருகிறது.

அங்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி வகிப்பவர் சர்தார் முஸ்தபாகான் தரீன். கடந்த வெள்ளிகிழமை அவரது மகன் அசாத் கான் தரின், பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பியபோது காணவில்லையாம். தற்போது அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கடத்தியவர்கள் யார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலுசிஸ்தான் மாகாண முதல்மைச்சர் நவாஸ் சனவுல்லா ஜெஹ்ரி, அமைச்சரின் மகன் அசாத் கான் தரினை பத்திரமாக மீட்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications