இந்தியா அடித்த அடி.. சீனாவை உதறி தள்ளிய பாகிஸ்தான்.. 5ம் தலைமுறை விமானத்தை வாங்க மறுப்பு.. பின்னணி
இஸ்லாமாபாத்: நம் நாட்டுடன் ஏற்பட்ட போரில் பாகிஸ்தான் பலத்த அடி வாங்கியது. சீனாவின் ஆயுதங்களை நம்பி நம்நாட்டிடம் பாகிஸ்தான் மண்டியிட்டது. இந்நிலையில் தான் சீனாவிடம் இருந்து 5ம் தலைமுறையை சேர்ந்த எஃப் 35 ரக போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் முடிவு செய்திருந்தது. ஆனால் திடீர் ட்விஸ்ட்டாக இந்த போர் விமானங்களை சீனாவிடம் இருந்து வாங்கும் திட்டம் இல்லை என்று பாகிஸ்தான் அந்தர் பல்டியடித்துள்ளது. இதன் பின்னணியில் இந்தியா அடித்த அடியும், அமெரிக்காவின் அரவணைப்பும் தான் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்டை நாடான பாகிஸ்தானுக்கும், நமக்கும் பிரச்சனை உள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பயங்கரவாதிகளை வைத்து சீண்டி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலியாகினர். இதற்கு நம் நாடு மே மாதம் 7 ம் தேதி முதல் 10ம் தேதி வரை பதிலடி கொடுத்து. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானால் நம்மை தொட்டு கூட பார்க்க முடியவில்லை. இதனால் நடுங்கிப்போன பாகிஸ்தான் நம் நாட்டிடம் சரணடைந்தது. தாங்கள் தாக்க மாட்டோம். தயவு செய்து தாக்குதலை நிறுத்தும்படி கெஞ்சியது. இதையடுத்து நம் நாடும் தாக்குதலை நிறுத்தியது.
பாகிஸ்தான் நம்மிடம் சம்மட்டி அடி வாங்க நமது இன்னொரு எதிரியான சீனாவும் ஒரு காரணம். பாகிஸ்தானை எடுத்து கொண்டால் அதன் பாதுகாப்பு துறையில் 81 சதவீத இறக்குமதியை சீனாவிடம் இருந்து தான் மேற்கொள்கிறது. இதனால் சீனா - பாகிஸ்தான் இடையே நெருங்கிய உறவு உள்ளது. பாகிஸ்தானில் சீனாவின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், பாதுகாப்பு துறை சார்ந்த ஹார்ட்வேர், சாப்ட்வேர்கள் உள்பட பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை கூட பாகிஸ்தான் சீனாவிடம் இருந்து வாங்கிய ஜே-10சி போர் விமானங்கள் மற்றும் பிஎல்-15இ ஏவுகணை மற்றும் ரேடார்களை பயன்படுத்தி தான் முறியடிக்க முயன்றது. ஆனால் நம் நாட்டின் தாக்குதலில் சீனாவின் தயாரிப்புகள் தாக்குப்பிடிக்கவில்லை. இதுதான் பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக மாறியது.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் தனது விமானப்படையை பலப்படுத்தும் வகையில் சீனாவிடம் இருந்து 40 அதிநவீன போர் விமானங்களை வாங்க முடிவு செய்திருந்தது. இதற்கு பாகிஸ்தான் விமானப்படை ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி சீனாவிடம் இருந்து ஸ்டெல்த் பைட்டர் ஜே - 35 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த போர் விமானங்களை சீனா தான் தற்போது வரை பயன்படுத்தி வருகிறது. இது 5ம் தலைமுறை விமானாகும். இந்த ஸ்டெல்த் பைட்டர் ஜே - 35 ரக விமானங்களை இதுவரை சீனா பிற நாடுகளுக்கு வழங்காத நிலையில் முதல் முறையாக பாகிஸ்தான் வாங்க உள்ளதாக கூறப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு தலைவலியாக மாறும் என்று சொல்லப்பட்டது. நம் நாட்டிடம் 5ம் தலைமுறை விமானம் கிடையாது. ரஃபேல் எனும் 4.5ம் தலைமுறை விமானம் தான் உள்ளது. இதனால் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் எஃப் 35 ரக போர் விமானங்களை பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது.
ஏன் என்றால் இந்த ஜே - 35 ரக போர் விமானங்கள் அமெரிக்காவின் எஃப் 35 ரக போர் விமானங்களின் வடிவங்களை ஒத்திருக்கும். இருப்பினும் உருவத்தில் சின்னசின்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எஃப் 35 ரக விமானத்தை விட ஜே 35 ரக விமானங்கள் சற்று அகலமானது. அதேபோல் மாக் 1.6 என்ற வேகத்தில் அமெரிக்காவின் எப்ஃப் 35 ரக விமானங்கள் செல்லும். ஆனால் சீனாவின் ஜே -35 அதை விட அதிக செயல்திறன் கொண்டது. அதாவது மாக் 2.0 வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டது.
ஆனால் அமெரிக்காவின் எஃப்35 ரக விமானம் நிற்காமல் 2,220 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும். அதை ஒப்பிடும்போது சீனாவின் ஜே 35 ரக விமானம் 1,200 கிலோமீட்டர் வரை மட்டுமே நிற்காமல் பயணிக்க முடியும். இருப்பினும் தற்போது பாகிஸ்தானில் உள்ள போர் விமானங்களை காட்டிலும் சீனாவின் ஜே -35 ரக விமானங்கள் நவீன தொழில்நுட்பங்களுடன் இயங்கும்.
இப்படியான சூழலில் தான் பாகிஸ்தான் தற்போது சீனாவிடம் இருந்து ஜே 35 ரக போர் விமானங்களை வாங்கப்போவது இல்லை என்று அறிவித்துள்ளது. இது சீனாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த திடீர் முடிவின் பின்னணியில் 2 காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஒன்று இந்தியா. அதாவது சமீபத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. பாகிஸ்தான் சீனாவின் போர் விமானங்கள், ஏவுகணை, ரேடார், வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை நம்பி நம் நாட்டிடம் அடிவாங்கியது. இதனால் பாகிஸ்தானுக்கு சீனா மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. இனி சீனாவிடம் இருந்து போர் விமானங்கள் வாங்கி ஏமாற வேண்டாம் என்று பாகிஸ்தான் நினைக்கிறது.
2வது காரணம் என்னவென்றால் பாகிஸ்தான், அமெரிக்காவுடன் நெருக்கம் காட்ட விரும்புகிறது. சமீபத்தில் கூட பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரை வாஷிங்டன் வெள்ளை மாளிகைக்கு அழைத்து டொனால்ட் டிரம்ப் லஞ்ச் வழங்கினார். நம் நாட்டிடனான போரில் பாகிஸ்தான் தோற்றாலும் கூட அசீம் முனீரை அழைத்து டிரம்ப் விருந்து கொடுத்தார். இதன் பின்னணியில் பாகிஸ்தானில் உள்ள விமானதளம், ராணுவ தளங்களை அமெரிக்காவின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்
இந்த டீலுக்கு ஒப்புக்கொள்ளும்பட்சத்தில் பாகிஸ்தானுக்கு தோவையான ராணுவ தளவாடங்கள், நிதி உதவிகளை வழங்கியதாக ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினார். இதனால் நம் நாட்டை சமாளிக்க அமெரிக்காவிடம் இருந்து நவீன ஆயுதங்கள், போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் திட்டமிட்டு சீனாவின் ஜே 35 ரக போர் விமானத்தை வாங்கும் முடிவை கைவிட்டு இருக்கலாம் என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications